பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 141

யர்' என்பதற்கும் காரணம் இதுவே.  (பொதுவரென்பதன் பெண் பன்மை,
பொதுவியர்.) ஆரவம் - வடசொல்; இங்கே, கொண்டாட்டத்தாலுண்டாகும்
பேரொலி.  'மிகவும்' என்றது -
மத்திமதீபமாய்,முன்நின்ற 'அடங்கினர்'
என்றதனோடும், பின்நிற்கும் 'ஆர்த்தார்' என்பதனோடும் கூட்டப்பட்டது.
'உகுத்தென' என்பதை - உகுத்தாலெனஎன வினையெச்சவிகாரமாக வாயினும்,
உகுத்ததென எனத்தொழிற்பெயர் விகாரமாக வாயினுங் கொள்க.  மச்சர்கோ
மகன் - மச்சநாட்டிலுள்ளார்க்கு அரசனாகிய விராடனது குமாரன். கோபாலர் -
பசுக்களைக் காப்பவர்; வடசொல்.

     வெந்தநெய் - காய்ச்சுகையில் வெண்ணெயின் நீர்ப்பசையற்ற நெய்;
கொதிப்புத்தணியாத நெய்.  தொழில்பற்றி வந்த
உவமையணி. பால்துளி
யுகுத்தல்,  நீர்ப்பசையற்றதையும் அறாமையையும் உணர்தற்கென்க.
வெந்தநெய்யென ஆர்வமடங்கின ரெனவும், அந்த நெய்யினிற்
பாற்றுளியுகுத்தென ஆர்த்தா ரெனவும் கூறியன - இடத்துக்கும் சாதிக்கும்
ஏற்ற உவமைகள்; இங்ஙனங் கூறுவது, மகாகவிகளது இயல்பு.  சிந்தாமணியிலும்
கோவிந்தையாரிலம்பகத்தில் "ஆய்த்தியர்நலக் காசெல் தூணனான்", "ஆயர்
மத்தெறி தயிரினாயினார்," "மத்தம் புல்லிய கயிற்றின் மற்றவ,
ரத்தலைவிடினித்தலைவிடார்," "வெண்ணெய்போன்றூறினியண்மேம்பால்போல்
தீஞ்சொல்ல, ளுண்ணவுருக்கிய வானெய்போன் மேனியள்,"
"ஊழிதோறாவுந்தோழும் போன்றுடன் மூக்க" என ஆங்காங்குக் கூறியிருத்தல்
காண்க.                                                   (215)

57.-பசுக்கள் மீண்டு ஓடிவருதல்.

பாலெடுத்தபொற்குட நிகர்மடியினபருவச்
சூலெடுத்தநல்வயிற்றின மழவிடைதொடர்வ
கோலெடுத்திளங்கோவலர் கூவினர்துரப்ப
வாலெடுத்தனதுள்ளிமீண் டோடினவனமே.

   
(இ - ள்.) பால் எடுத்த பொன் குடம் நிகர் மடியின - பாலை
நிரம்பக்கொண்ட பொன்மயமான குடத்தைப் போன்ற மடியையுடையவைகளும்,
பருவம் சூல் எடுத்த நல் வயிற்றின - பருவமுதிர்ந்த கருப்பத்தைக்கொண்ட
அழகிய வயிற்றையுடையவைகளும், மழ விடை தொடர்வ - இளமையுள்ள
எருதுகளாற் காதலோடு பின் தொடரப்படுவனவும் ஆகிய பசுக்கள்,-
இளங்கோவலர் - (உத்தரகுமாரனோடு) வந்த இளைய இடையர்கள்
[இடைப்பிள்ளைகள்], கோல் எடுத்து - (கையிற்) கோலை ஓச்சி, கூவினர்
துரப்ப-கூவி ஓட்ட, வால் எடுத்தன - வாலைத் தூக்கிக்கொண்டவைகளாய்,
துள்ளி-, மீண்டு - திரும்பி, வனம்-(தாம் வழக்கமாக மேயும்
விராடனதுநகர்ப்புறத்துக்) காட்டிற்கு, ஓடின-; (எ - று.)

     'பாலெடுத்தபொற்குடநிகர்மடியின' - கறக்கும் பசுக்கள்.
'பருவச்சூலெடுத்த நல்வயிற்றின' - சினைமுதிர்ந்த பசுக்கள். 
'மழவிடைதொடர்வ' - சினைகொள்ளற்பாலன வாகிய பசுக்கள்.  பருவச்சூல் -