பக்கம் எண் :

நாடுகரந்துறை சருக்கம் 15

அமர்ந்தபின்பு, மற்றைநாள்-,-ஒற்றை வெள் கவிகை-ஒற்றைவெண்கொற்றக்
குடையையும், சேய் ஒளி மகுடம் - செந்நிற வொளியையுடைய
கிரீடத்தையுந்தரித்த, சென்னியான் - முடியையுடையவனாகிய விராடன், இருந்த
- தங்கியுள்ள, பேர் அவை - பெருஞ்சபை, சிறப்புஉற - சிறப்படையும்படி,
சென்று-, தூய வெள் புரிநூல் முனி திரு கழலில் - பரிசுத்தமான
வெண்மையையுடைய முப்புரி நூலையணிந்த துறவியாகிய தருமபுத்திரனுடைய
சிறந்த பாதங்களில், ஒரு புடை - ஒருபகுதியில், தோய்தர-படியும்படி,
தலைசாய்த்து - தலையைவணங்கி, (அருச்சுனன் பிறகு மன்னவனை நோக்கி),-
'ஏய வெம் சிலை கை - ஏவுந்தன்மையுள்ள கொடிய வில்லைத்தரித்த கைகளை
யுடைய, அருச்சுனன் கோயில் - அருச்சுனனுடைய அரண்மனையிலே,
இருப்பது - இருத்தலையுடைய, ஓர் பேடி நான் - ஒருபேடியாவேன் யான்,'
என்றான் - என்று (தன்னைத்) தெரிவித்தான்; (எ - று.)

      நான்அருச்சுனன்; இப்போது கோயிலில் [ராஜகிருகத்தில்] வசித்தற்குரிய
பேடிவடிவம் படைத்துள்ளேன் என்று ஒருபொருளும் இதில் தோன்றுதல்
காண்க.  பேடி - பெண்ணுறுப்புமிக்கு ஆணுறுப்புக் குறைந்த நபும்ஸகம். (18)

19.-இதுவும் அது.

நாதமுமியலுமேதகுநடநூனவிறருமரங்கினுக்குரியேன்
பேதையர்தமக்குநடம்பயிற்றுவிப்பேன்பெயர்பிருகந்நளையென்ப
ஆதிபநினதுசெல்வமாநகரிலிருப்பதற்கெண்ணிவந்தடைந்தேன்
வேதமுமுலகுமுள்ளநாளளவும்விளங்குகநின்மரபென்றான்.

     (இ-ள்.) 'நாதம்உம் - இன்னொலியான சங்கீதமும், இயல்உம் -(பாடுதற்கு
உரிய) பாடலும், மேதகு - மேம்படுகின்ற, நடம் நூல் - நடனசாஸ்திரத்தில்,
நவில்தரும் - கூறியபடி யமைந்துள்ள, அரங்கினுக்கு - நர்த்தன
சாலையிலாடுவதற்கு, உரியேன் - உரியவள்: (அன்றியும்), பேதையர் தமக்கு -
மகளிர்க்கு, நடம்-நர்த்தனத்தை, பயிற்றுவிப்பேன் - பழக்குவித்தற்கு வல்லேன்:
பெயர்-(என்னுடைய) பெயர், பிருகந்நளை என்ப - பிருகந்நளையென்று
சொல்வார்கள்: ஆதிப - தலைவனே! நினது செல்வம் மா நகரில் -
உன்னுடைய வளப்பமுள்ள நகரத்தில், இருப்பதற்கு-வசிப்பதை, எண்ணி-
நினைத்து, வந்து அடைந்தேன்-; வேதமும்-, உலகும்-, உள்ள நாள்
அளவுஉம்-இருக்கும்நாள் வரையிலும், நின் மரபு-உனதுகுலம், விளங்குக-,'
என்றான்-; (எ - று.)

     நர்த்தனஞ்செய்யும்போது சங்கீதமும் பாடலும் உடன்
வேண்டியிருத்தலால்,'நாதமுமியலு மேதகுநடம்' எனப்பட்டது.      (19)

20.-விராடன் பிருகந்நளையைக் கொண்டாடி,
உத்தரையென்ற தன்மகளுக்குப் பாங்கியாக அவளிடத்து விடுத்தல்.

வித்தகனெனவெக்கலைகளும்பயின்றவிராடனும்பேடிதன்மொழி
                                              கேட்டு
இத்திறமுடையார்வேலைசூழுலகினில்லையென்றினிதுரைத்தருளி