பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 155

வரைத்,தேவரைப்போலத் தொழுதெழுகவென்பதே யாவருங்கண்டநெறி"
என்றபடி தெய்வமாகக் கொண்டாடத் தக்கவ ராதலாலும், இவர்களைக்
கொல்லுதல் கொடியபாதகமாகு மென்க; "மாறன்மையின் மறம்வாடுமென்
றிளையாரையுமெறியான், ஆறன்மையின் முதியாரையு மெறியா னயிலுழவன்"
எனற் சிந்தாமணி இங்கு நோக்கத்தக்கது. 
அரசன், உபாத்தியாயன்,தாய்
தந்தை தமையன் என்ற ஐவரும் - ஐம்பெருங்குரவ ரெனப்படுவர்.

     இரவலர் - இரத்தலில் வல்லவர்:  அன்றி, இரவல் அர் -
இரக்குந்தொழிலுடையவர்.  அறிவினாலும் பருவத்தாலும் ஒழுக்கத்தாலும்
முதியவர்களாகிய ஞானவ்ருத்தர் வயோவ்ருத்தர் சீலவ்ருத்தர் என்னும்
மூவகைப்பெரியோரும் அடங்குவதற்கு, பொதுப்பட 'விருத்தர்' என்றான்.
என்றிவர் - தொகுத்தல்.  கோறல் - தொழிற்பெயர்.                (233)

75.-துரோணர் முதலியோர்அருச்சுனனை வளைத்தல்.

பற்பலவுரையிவன்பகருமேல்வையில்
சொற்பயினான்மறைத்துவசன்வீடுமன்
கற்பகநிகர்கொடைக்கன்னனாதியோர்
மற்புயநிருபனைவந்துகூடினார்.

      (இ -ள்.) பல்பலஉரை - (இவ்வாறு) பலபலவார்த்தைகளை, இவன்
பகரும் ஏல்வையில் - இவ்வருச்சுனன் (துரியோதனனை நோக்கிச்) சொல்லி
இகழ்கின்றபொழுதில்,-சொல் பயில் நால் மறை துவசன் - (பலர்) சொல்லுதல்
பொருந்திய நால்வகைப்பட்ட வேதத்தை யெழுதிய கொடியையுடையவனான
துரோணாசாரியனும், வீடுமன் - பீஷ்மனும், கற்பகம் நிகர் கொடை கன்னன் -
கல்பகவிருக்ஷம்போன்ற தானத்தையுடைய கர்ணனும், ஆதியோர் -
முதலானவர்கள், மல் புயம் நிருபனை - வலிமையுள்ள தோள்களையுடைய
அரசனான அருச்சுனனை, வந்து கூடினார் - திரண்டு வந்து வளைந்தார்கள்;
(எ - று.)

      சொல்பயில் - கல்வியைப் பிறர்க்குப்போதிப்பதில் தேர்ச்சியுள்ள
என்றலு மொன்று.  நான்மறை - இருக்கு, யசுர், சாமம், அதர்வணம் என்பன;
தைத்திரியம், பௌடிகம், தலவகாரம், சாமம் என்பாரு முளர்.  மறைத்துவசன் -
வேதக்கொடியுடையான்.  துரோணன் ஆதியில் வீடுமனிடம்
வந்துசேர்ந்தபொழுது வீடுமன் துரோணனைக் கௌரவபாண்டவர்க்குப்
பிரதானவில்லாசிரியனாக்கி அவனுக்கு இராசபட்டத்தையும் அரசர்க்கு உரிய
குடை கொடி சாமரம் தேர் கிரீடம் முதலிய அங்கங்களையும்
அளித்தனனாதலின், இவற்குத் துவசம் உரியதாயிற்று.

     கற்பகம் - கல்பகம்:  (வேண்டுவோர் வேண்டுவனவற்றைக்)
கல்பிப்பதென்று பொருள்படும்:  கல்பித்தல் - உண்டாகச்செய்தல்.  இது, பிறர்
தன்னிடம்வந்து நினைத்தவற்றையெல்லாம் அவர்