பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 167

மடக்கியகடைவிரலுக்குப் பின் தன்னோடொக்க வேறொருவரை யெண்ணிப்)
பவித்திரவிரலைமடக்கக்கூடாத [ஒப்பற்ற என்றபடி], முதிர்சிலை முனிஉம் -
மிகப்பயின்ற வில்வித்தையையுடைய துரோணாசாரியனும், வீரம் முனிவு இலா
முகன்உம் - வீரத்தன்மையினாலுண்டாகின்ற கோபக் குறியில்லாத முகத்தை
யுடையவனான அருச்சுனனும், விட்ட - (தம்மில் ஒருவரைக்குறித்து ஒருவர்)
தொடுத்த, கதிர் முனை - கூரிய நுனியையும், பவனம் வேகம் - காற்றுப்போல
விரைந்துசெல்கின்ற வேகத்தையுமுடைய, கடும்கொடும் பகழி யாஉம் -
மிகக்கொடிய அம்புக ளெல்லாம், எதிர் எதிர் கோத்த அல்லால் - (தம்மில்
ஒன்றற்கு ஒன்று) நேருக்கு நேராய் மோதி இடையில் தடைப்பட்டன
வல்லாமல், இருவர்மேல்உம் பட்டில - (இலக்காக எய்யப்பட்ட) இரண்டு
வீரர்களில் ஒருவருடம்பிலும் பட்டுத் தைத்தனவில்லை; (எ - று.)

     துரோணனும் அருச்சுனனும் எதிர்த்துத் தமது பலவகைத்
திறமைகளையுங்காட்டி ஒருவர்மீது ஒருவர் எய்த அம்புகளெல்லாம்
அவரவர்மாறாக எய்த எதிரம்புகளினால் தடுக்கப்பட்டு இடையில்
ஒன்றோடொன்று முட்டிக் கீழ் விழுந்திட்டனவேயன்றி ஒன்றேனும்
இவர்களுடம்பிற்படவில்லை யென்பதாம்.  "ஓரிரண்டுதனுவும் வாளி
யோரொர்கோடி யுதையவே, காரிரண்டெதிர்ந்து தம்மில் மலைவுறுங்
கணக்கெனப், போரிரண்டுவீரருக்கு மொத்துநின்ற பொழுதிலே" என்பது, இங்கு
ஒப்பு நோக்கத்தக்கது.

     அதிரதர், மகாரதர், சமரதர், அர்த்தரதர் எனத் தேர்வீரர்
நால்வகைப்படுவர்.  அதிரதர- முழுத்தேரரசர்; அவராவார் - ஒருதேரில் ஏறி
நின்று தம்தேர் குதிரைசாரதிகட்கு அழிவுவராமற் காத்துப்பலவாயிரந்தேர்
வீரரோடு எதிர்த்து வேறு துணையில்லாமலே போர்செய்து வெல்லும்
வல்லமையுடையார்.  அவரிற் சிறிது தாழ்ந்தவர், மகாரதர்; இவர்,
பதினோராயிரந் தேர்வீரரோடு பொருபவர்.  சமரதர் - ஒருதேர்வீரனோடு
தாமும் ஒருவராயெதிர்க்கவல்லவர்.  அர்த்தரதர் - அவ்வாறு எதிர்க்குமளவில்
தம்தேர் முதலியவற்றை இழந்து போம்படியானவர்.  கடைவிரல், பவித்திரவிரல்,
நடுவிரல், சுட்டுவிரல், பெருவிரல் என்று முறையே கூறப்படுகிற
கைவிரலைந்தனுட் கடைவிரலை முதலாக வைத்து மடக்கி ஒன்று முதலாக
எண்ணித் தொகையிடுதல், மரபு.  உலகத்திலுள்ள சிறந்த அதிரதவீரர்களை
யெண்ணித் தொகையிடக்கருதித் துரோணாசாரியனொருவனென்று முதலிற்
கடைவிரலொன்றை மடக்கியெண்ணிய பின்பு இவனோடொப்பவைத்து
எண்ணுதற்கு ஏற்ற சிறந்த அதிரதவீரர் வேறொருவரில்லாமையால்
இரண்டாவதாகிய பவித்திரவிரலை மடக்கியெண்ணக்கூடாத ஒப்பற்ற சிறப்புள்ள
தநுர்வேதப்பயிற்சி மிகுதியையுடைய துரோணனென்பது, 'அதிரதர் தம்மை
யெண்ணி லணிவிரல் முடக்கவொட்டா முதிர்சிலைமுனி' என்றதன் கருத்து.
மேல் இராசசூயச்சருக்கத்தில், "மண்மிசைநால் விரனிற்கு மணிமகுடத்
தணியரங்கு" என்பதும், பதினேழாம்போர்ச் சருக்கத்தில் "மற்றையணிவிரன்
முடக்க விணையிலாத மத்திரபூபன்" என்பதும்