தனக்குக் குதிரைநூலில் நன்கு பயிற்சியுண்டு என்ற உறுதி தோன்றுமாறு குதிரைசெலுத்துதற்குஏற்ற கருவியுடனே விராடராசன் குதிரையேறும் முன்றிலிலே நகுலனானவன் சென்றிருந்தனனென்பதாம். தருக்கு - செருக்கு: இங்குக் குதிரை நூலில் வல்லவனென்று தன்மனத்துக் கொண்டுள்ள உறுதியான எண்ணம். மத்திகை - குதிரையைச் செலுத்துகையில் உபயோகிக்குஞ் சாட்டை. கம்பிஎன்பதற்கு - உளவுகோல் என்று கூறினாரு முளர். (21) 22.-இதுமுதல் மூன்றுகவிகள் - விராடராசன்வினவ, நகுலன் தன்னை இன்னானென்று தெரிவித்தமைகூறும். சென்றவன்றன்மேற்புரவிமேலிருந்தோன்செழுந்தடங்கண்மலர்பரப்பி வன்றொழிற்புரவிவான்றொழிற்குரியோயெவ்வயினின்றுவந்தனைநீ என்றலுமவனுமியம்பினன்விசயற்கிளையவனகுலனென்றெல்லாக் குன்றினுந்தன்பேரெழுதினோனவன்றன்கொற்றம்யார்கூறுதற்குரியார். |
நான்கு கவிகள் - ஒருதொடர்.
(இ - ள்.) புரவிமேல் இருந்தோன் -குதிரையின்மேலேறியிருந்தவனான விராடன்,-சென்றவன் தன்மேல்-(மன்னவன் குதிரையேறும் முன்றிலிலே போய்ச்) சேர்ந்திருந்தவனான நகுலன்மீது, செழுந் தடகண் மலர் பரப்பி - வளமுள்ள பெரிய (தன்) கண்மலரைப் பரவச்செய்து [பார்த்து], 'வல் தொழில் புரவி வான் தொழிற்கு உரியோய்-வலியதொழிலாகிய குதிரைசெலுத்துஞ் சிறந்ததொழிலுக்கு உரியவனே! நீ-, எ வயின்நின்று வந்தனை- எவ்விடத்திலிருந்து வந்தாய்?' என்றலும்-என்று வினாவியவுடனே,-அவன்உம்- அந்த நகுலனும், இயம்பினன்-(பின்வருமாறு) கூறலானான்: 'விசயற்கு இளையவன் - அருச்சுனனுக்கு அடுத்த தம்பியாகிய, நகுலன் என்று எல்லாம் குன்றின்உம் தன் பேர் எழுதினோன்-நகுலனென்று சொல்லப்பட்டு எல்லாமலையிலும் தன்பேரைத் தீட்டினவன் (ஒருவன் உளன்): அவன் தன் கொற்றம் - அவனுடைய வெற்றியை, யார் கூறுதற்கு உரியார் - யார் சொல்லவல்லார்? (எ - று.)
யாவரும் அறியும்பொருட்டு உயர்ந்தஇடத்தில் பேரையெழுதி வைத்தல், இயல்பு. (22) 23. | மற்றவன்றனதுவாசிமந்துரைக்குத்தலைவராய்வாழுமாக்களில்யான், உற்றவனொருவன்வாம்பரிவடிவு முரைதகுசுழிகளுமொளியும், பற்றியநிறனுங்கந்தமுங்குரலும் பல்வகைக்கதிகளும் பிறந்த, சொற்றகுநிலனுமாயுவுமுணர்வேன் றுயருறுபிணிகளுந்தவிர்ப்பேன். | (இ - ள்.) யான்-,-அவன் தனது -அந்தநகுலனுடைய, வாசி மந்துரைக்கு - குதிரைகட்டுங் கொட்டிலுக்கு, தலைவர் ஆய்-, வாழும்-, மாக்களில் - மனிதர்களுள், உற்றவன் ஒருவன் - சேர்ந்தவனான ஒருத்தன்: (யான்),-வாம் - தாவிச்செல்லுகின்ற, பரி வடிவு உம் - குதிரையின் வடிவமும், உரை தகு - சிறப்பித்துச்சொல்லத்
|