அழிந்து -சூதாட்டத்தில் தோற்று, அன்று - அக்காலத்தில், நின் முன் - உனது முன்னிலையிலே, மன் அவைதன்னின் - இராஜசபையில், சொல்லிய - வரையறுத்துச் சொல்லி யுடன்பட்ட, காலம் - அஜ்ஞாதவாசஞ் செய்யவேண்டிய ஒரு வருஷகாலம், செல்லாமுன் - முடியக் கழிவதற்கு முன்னமே, தோற்றம் செய்தார் - வெளிப்பட்டுத் தோன்றிவிட்டார்கள்; (ஆதலால், முன்னைய ஏற்பாட்டின்படி), இன்னம் - மறுபடியும், புல்லிய கானின் போக - இழிவான காட்டிற்குச் செல்லும்படி, நீ புகறி - நீ (அப்பாண்டவர்களை நோக்கிச்) சொல்வாயாக,' என்று சொல்ல-, வீடுமன் - பீஷ்மன், மீண்டும் சொல்வான் - (அதற்குப்) பிரதியுத்தரஞ்சொல்பவனானான்; (எ - று.) - அதனை, அடுத்த கவியிற் காண்க. வல் -சூதாடுகருவி; அதுகொண்டு ஆடும் ஆட்டத்துக்கு இங்கு ஆகுபெயர். அவை = ஸபா. கார்முகம் கைத்தலத் திருப்பப் போர்முகத்துப்புறந்தந்து போனவனை இங்கு 'வெல்படைவேந்தன்' என்றது, இகழ்ச்சிக்குறிப்பாகியஎதிர்மறையிலக்கணை: இனி, வெல் படை என்ற வினைத்தொகையைச் செயப்பாட்டுவினைப்பொருளில் வந்த செய்வினை யென்றுகொண்டு, (அருச்சுனனால்) வெல்லப்பட்ட சேனையையுடைய துரியோதனராசனென்று உரைத்தலுமொன்று. 106.-அஞ்ஞாதவாசம் பூர்ணமாய்விட்ட தென்றுவீடுமன் விடையளித்தல். செந்நெலேகன்னல்காட்டச்சேர்ந்தயற்செறுவினின்ற கன்னலேகமுகுகாட்டுங்கங்கைநீர்நாடகேண்மோ இன்னலேயுழந்தோர்காலமிந்துவினியக்கந்தன்னான் நென்னலேசென்றதென்றானெஞ்சினிலழுக்கிலாதான். |
(இ -ள்.) செந்நெல்ஏ கன்னல் காட்ட - செந்நெய்பயிர்கள் தாம் கரும்புகள்போல வளர்ந்து தோன்றாநிற்க, அயல் செறுவில் சேர்ந்து நின்ற கன்னல் ஏ கமுகு காட்டும் - பக்கத்துநிலங்களிற் பொருந்தியிருக்கின்ற கரும்புகள் தாம் பாக்குமரங்கள்போல வளர்ந்து காணப்படுகின்ற, கங்கைநீர் நாட - கங்காநதியின் நீர் பாயப்பெற்ற குருநாட்டுக்குத் தலைவனே! கேண்மோ - (நான் சொல்வதை நீ நன்கு) கேட்பாயாக: இன்னல்ஏ உழந்தோர் காலம் - (இளமை தொடங்கித்) துன்பங்களையே யனுபவித்துவருந்தியவர்களான பாண்டவர்கள் (மறைந்து வசிக்க வேண்டிய) ஒருவருஷகாலமானது, இந்துவின் இயக்கந்தன்னால் - சந்திரனது ஸஞ்சாரத்தால் (சாந்திரமானபக்ஷரீதியாய்), நென்னலே சென்றது - நேற்றோடே கழிந்துவிட்டது', என்றான் - என்று (துரியோதனனைநோக்கிச்) சொல்லினான்: (யாவனெனில்),-நெஞ்சினில் அழுக்கு இலாதான் - மனத்திற் களங்கஞ் சிறிதுமில்லாதவனான பீஷ்மன்; (எ - று.) இவ்வாறு கூறியது, திருவேங்கடமலைக்கு வடக்கிலுள்ளார்க்குச் சௌரமான பக்ஷத்தினும் சாந்திரமானபக்ஷம் சிறந்ததாதலின்; சந்திரகுலத்தரசர் சாந்திரமான பக்ஷரீதியை அநுசரித்தற்குரிய ரென்பது |