பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 185

      திருமகன் - செல்வப்பிள்ளை.  மைதீட்டிய கண்ணுக்கு உவமையாதற்
பொருட்டு, விடம்படுவேல் கூறினார்.  ஏந்தியவரது கோபத்தை வேலின் மேல்
ஏற்றி 'வெகுளிவேல்' எனப்பட்டது; 'சினவாள்' என்றாற் போல.       (272)

114.-விராடனைக்கங்கபட்டன் தேற்றி, 'பேடி தேரூர்ந்தாளாயின்
உத்தரன்வென்று இப்போதே வருவான்' என்றல்.

சந்தனவளறும்வாசத்தண்பனிநீரும்வீசி
வெந்திறல்வேந்தன்றன்னைமெய்ம்மெலிவிருந்துதேற்றி
மைந்தனிப்பொழுதேவென்றுவருகுவன்பொற்றேரூர்ந்தாள்
அந்தமெய்ப்பேடியாகிலென்றனனந்தணாளன்.

      (இ -ள்.) (அப்பொழுது),- அந்தணாளன் - கங்கப்பட்டனென்கிற
சந்நியாசியாகிய தருமபுத்திரன்,- இருந்து - (பக்கத்தில்) இருந்து,- சந்தனம்
அளறுஉம் - சந்தனக்குழம்பையும், வாசம் தண் பனி நீர்உம் - நறுமணமுள்ள
குளிர்ச்சியான பனிநீரையும், வீசி - (அவ்விராடராசன்மீது) தெளித்து,
வெம்திறல் வேந்தன் தன்னை - (பகைவர்க்கு)அச்சந்தருகிற
வல்லமையையுடைய அவ்வரசனை, மெய் மெலிவு - உடல்
மெலிவை [மூர்ச்சித்து விழுந்ததை], தேற்றி - தெளியச்செய்து, 'அந்த மெய்
பேடி - உண்மையான அந்தப்பேடி [பிருகந்நளை], பொன் தேர் ஊர்ந்தாள்
ஆகில்-அழகிய தேரை யோட்டிக்கொண்டு சென்றனளேயாயின், மைந்தன் -
(உத்தர) குமாரன், இப்பொழுதே வென்று வருகுவன் - வெகுவிரைவிலே
(பகைவரைச்) சயித்து (நிரைமீட்டு) வருவன்,' என்றனன் - என்று தேறுதல்
கூறினான்; (எ - று.)

     மெய்ப் பேடி - உண்மையன்புடைய பேடி யெனினுமாம்; இத்தொடரில்,
மெய்யினால் [வடிவுமாத்திரத்தால்] பேடி [வலிமையாற் பேடியன்று] என்ற
பொருள்  உள்ளுறையாய்த் தோன்றுதல் காண்க: இனி,
பொய்ப்பேடித்தன்மையை வெளிப்படாது மறைத்தற்கு 'மெய்ப்பேடி'
என்றாருமாம்.  அழகிய குளிர்ச்சியை அருளை ஆள்பவனென்ற சொல்லாற்
கங்கபட்டனை அந்தணாளன்என்று கூறியதில், இங்ஙனம் சைத்தியோபசாரஞ்
செய்தும் குளிர்ந்த சொற்களைக்கூறியும் சமயத்தில் தாபசாந்திசெய்தற்கேற்றவ
னென்னும் கருத்துத்தோன்றுதலால் கருத்துடையடை கொளியணி.

115.-தூதர் சென்று விராடனிடஞ் செய்திகூறல்.

அறன்மகன்வாய்மைதேறியரசனாங்கிருந்தவெல்லை
மறனுடையுரககேதுவன்சமரழிந்தவாறும்
உறமலைந்தொருதன்றேர்கொண்டுத்தரன்வென்றவாறும்
தொறுநிரைமீட்டவாறுந்தூதர்போய்த்தொழுதுசொன்னார்.

      (இ -ள்.) அறன்மகன் வாய்மை - தருமபுத்திரனது வார்த்தையினால்,
அரசன் - விராடராசன், தேறி - (சிறிது) தெளிவடைந்து, ஆங்கு இருந்த
எல்லை - அவ்விடத்திலிருந்த சமயத்தில்,-தூதர்