பக்கம் எண் :

186பாரதம்விராட பருவம்

(அருச்சுனனுப்பிய) தூதுவர், போய் - (அவ்விராடனிடஞ்) சென்று,-தொழுது -
(அவ்வரசனை) வணங்கி,- மறன் உடை உரககேது வல் சமர் அழிந்த ஆறுஉம்
- வலிமையுள்ள பாம்புக்கொடியையுடையவனான துரியோதனன் வலியபோரில்
தோற்றுப்போன செய்தியையும்,- உத்தரன்-, ஒரு தன் தேர்கொண்டு - தனது
இரதமொன்றைக்கொண்டே, உற மலைந்து - நன்றாகப் போர்செய்து, வென்ற
ஆறுஉம் - (பகைவரைச்) சயித்த செய்தியையும், தொறு நிரை மீட்ட ஆறுஉம்
- (பகைவர்கவர்ந்த) பசுக்கூட்டங்களை மீட்டுக்கொண்டு வந்த செய்தியையும்,
சொன்னார் - சொன்னார்கள்; (எ - று.)

     வாய்மை தேறி-சொல்லை நம்பி யெனினுமாம்.  இருந்த எல்லை,
சொன்னார் என இயையும்.  மறன் - ஈற்றுப்போலி.  உரக கேது -
பாம்பின்வடிவைக் கொடியிலுடையவன் என வேற்றுமைத்தொகைப் புறத்துப்
பிறந்த அன்மொழித்தொகை; வடநூன்முடிபு.  எளிதில் வெல்லப் பட்டமை
தோன்ற, 'அழிந்தவாறு' என அவன் செய்கையாகக் கூறினார்.        (274)

116.-அரசன் மகிழ்ந்து அனைவரையும்
 எதிர்கொள்ளச் சொல்லுதல்.

சீதளவமுதவாரிசெவிகளிற்செறிந்ததென்னத்
தூதர்வந்துரைத்தசொல்லாற்சோகமுந்துனியுமாறித்
தாதையன்றேதுசெய்தான்றனையொழிந்துள்ளசேனை
யாதிபரெவருமெய்தியண்ணலையெதிர்கொள்கென்றான்.

      (இ -ள்.) சீதளம் அமுதம் வாரி - குளிர்ச்சியான அமிருதவெள்ளம்,
செவிகளில் செறிந்தது என்ன - காதுகளிற் சேர்ந்ததுபோல, தூதர் வந்து
உரைத்த சொல்லால் - அத்தூதர்கள் வந்து சொல்லிய அச்சொற்களினால்,
தாதை - (உத்தரனது) தந்தையாகிய விராடன், சோகம்உம் துனிஉம் மாறி -
துன்பமும் கவலையும் நீங்கப்பெற்றவனாய் [மிகமகிழ்ந்து], அன்று-அப்பொழுது,
ஏது செய்தான் - என்னகாரியஞ்செய்தான், (என்றால்),-'தனைஒழிந்து உள்ள
சேனை ஆதிபர் எவர்உம் - தன்னையொருவனைத் தவிர உள்ள சேனைத்
தலைவர்களெல்லாரும், எய்தி-சென்று, அண்ணலை எதிர்கொள்க -
பெருமையிற் சிறந்தவனாகிய உத்தரனை எதிர்கொண்டு அழைத்துவருவாராக,'
என்றான்-என்று கட்டளையிட்டான்; (எ - று.)

     தேவாமிருதம் நாவுக்கு இனிமைதருவது போல இத்தூதர் சொற்கள்
அரசனது செவிக்கு இனிமைதருவது பற்றியும், அமிருதம் மரணத்தைத்
தவிர்ப்பதுபோல இத்தூதர்சொற்கள் அரசனது பெருஞ்சோகத்தை
மாற்றுவதுபற்றியும், 'சீதளவமுதவாரிசெவிகளிற் செறிந்ததென்னத்
தூதர்வந்துரைத்த சொல்லால்' எனப்பட்டது.   வியப்புத் தோன்ற, 'தாதை
அன்று ஏது செய்தான்.  தனையொழிந்துள்ள சேனையாதிபரெவரு
மெய்தியண்ணலை யெதிர் கொள்கென்றான்' என்று வினாவும் விடையுமாகக்
கூறினர்.  சேனைத்