பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 187

தலைவர்எதிர்கொள்ளவேண்டுமென்பது கூறவே, சேனைகளும்
எதிர்கொள்ளுதல் அடங்கும்.  இனி, சேனைகளும் ஆதிபரும் எனினுமாம்.
துனி-சோகத்தின்பின் சிறிதுபொழுது நிகழ்வது; அச்சமுமாம்: துனியும் ஆறி
என்று எடுத்து உரைக்கவும் இடமுண்டு.  ஆதிபர் - விகாரம்.       (275)

117,- விராடராசன்கொண்ட மிக்கமகிழ்ச்சியைக்
கவி இழித்துரைத்தல்.

சோரர்தங்கருவைத்தங்கள்கருவெனத்தோளிலேந்தி
ஆர்வமுற்றுருகுநெஞ்சினறிவிலார்தம்மைப்போல
வீரன்வெஞ்சமரம்வெல்லவிராடனுத்தரன்வென்றானப்
போரினையென்னாமேனிபுளகெழப்பூரித்தானே.

      (இ -ள்.) சோரர்தம் கருவை - (தம் மனைவியர்பக்கல்) கள்ளப்
புருஷராகிய அயலார்க்குப் பிறந்த குழந்தையை, தங்கள் கரு என -
தங்கட்குப்பிறந்த குழந்தை யென்று எண்ணி, தோளில் ஏந்தி -
(அக்குழந்தையைத் தங்கள்) - தோள்களில் தூக்கிவைத்துக்கொண்டு, ஆர்வம்
உற்று உருகும் நெஞ்சின் - (அக்குழந்தையினிடத்து) அன்புகொண்டு
இளகுகின்ற மனத்தையுடைய, அறிவு இலார் தம்மைபோல - அறிவில்லாத (சில)
ஆடுவரைப்போல,-வீரன் வெம் சமரம் வெல்ல - மகாவீரனான அருச்சுனன்
கொடிய போரில் வெற்றிகொண்டவனாயிருக்க, விராடன் -, அ போரினை-
அந்த யுத்தத்தை, உத்தரன் வென்றான் என்னா-(தன்மகனான) உத்தரன்
ஜயித்தானென்று உட்கொண்டு, மேனி புளகு எழ பூரித்தான் -
(மிக்கமகிழ்ச்சியால்) உடம்பு புளகமுண்டாகப் பருத்து நின்றான்; (எ - று.)

     சோரர்-கள்ளர்; இங்கே, பிறரறியாதபடி வந்து அயலார்க்குரிய மாதரைத்
தமக்குரியராக்கிக்கொள்பவர்:  வடசொல்.  கரு-கர்ப்பமென்ற வடசொல்லின்
சிதைவு: கருப்பத்தினின்று வெளிப்பட்ட குழந்தையைக் காட்டிற்று.  தம்மனைவி
பிறர்க்குப்பெற்ற பிள்ளையைத் தம்பிள்ளை யென்று கொஞ்சிக் குலாவிக்
கொண்டாடும் பேதையர்போல, விராடன் அருச்சுனனது போர்வெற்றியைத்
தன்மகனதுபோர்வெற்றி யென்று மாறுபடக்கருதி உண்மையறியாது
மிகமகிழ்ந்தன னென்பதாம்:  உவமையணி. உண்மையுணருமிடத்து
இவ்வகைத் தகுதியில்லாத மகிழ்ச்சிக்கு இடமில்லையென்பதுபட, 'அறிவிலார்'
என்றார்; அறிவிலார் - உண்மை யுணராத பேதையர்.  ஆர்வமாவது -
மனைவியரிடத்தும் தாய் தந்தை புத்திரர் முதலிய சுற்றத்தாரிடத்தும்
மனமகிழ்ச்சி நிகழ்த்திப் பிணிப்பித்து நிற்கும் நேயம். புளகு - வடமொழி
விகாரம்.  மேனிபுளகித்தலும், மேனி பூரித்தலும் - மகிழ்ச்சியினாலாகும்
மெய்ப்பாடுகள்.  விராடன் மேனிபூரித்தான் - திணைவழுவமைதி.      (276)

118.-விராடநகரத்தார் தமது நகரத்தையலங்கரித்தல்.
பூழிகளடக்கிச்செம்பொற்பூரணகும்பம்வைத்து
வாழையுங்கமுகுநாட்டிமணியொளித்தீபமேற்றிச்