பக்கம் எண் :

188பாரதம்விராட பருவம்

சூழவன்பதாகைகட்டித்தோரணம்பலவுநாட்டி
ஏழுயர்மாடமூதூரெங்கணுங்கோடித்தாரே.

      (இ -ள்.) (அந்நகரத்திலுள்ளார் யாவரும்),- பூழிகள் அடக்கி - (நிரம்பத்
தண்ணீர்தெளித்து வீதிகளிற்) புழுதிகளை (மேற்கிளம்பாதபடி) அடக்கியும், செம்
பொன் பூரண கும்பம் வைத்து - சிவந்த பொன்மயமான நீர்நிறை குடங்களை
(வாயில் திண்ணைகளில்) வைத்தும், வாழைஉம் கமுகும் நாட்டி -
வாழைமரங்களையும் பாக்கு மரங்களையும் (பந்தற்கால் முதலியவற்றிற்கட்டி)
நிறுத்தியும், மணி ஒளி தீபம் ஏற்றி - இரத்தினமயமான ஒளியையுடைய
விளக்குகளை ஏற்றிவைத்தும், சூழ வல் பதாகை கட்டி - சுற்றிலும்
[நகரமெங்கும்] வலிய துவசங்களைக் கட்டியும், தோரணம் பல உம் நாட்டி -
பலவகைத்தோரணங்களையும் தாபித்தும், ஏழ் உயர் மாடம் முதுஊர்
எங்கண்உம் கோடித்தார் - உயர்ந்த ஏழுநிலைகளை [உபரிகைகளை] யுடைய
மாளிகைகளைக்கொண்ட பழைமையான அந்நகர முழுவதும்
அலங்கரித்தார்கள்; (எ - று.)

      அரசன்கட்டளைப்படி நகரத்தவரனைவரும் இங்ஙனம் நகரையலங்
கரித்தனரென்க.  தேர் முதலியன வரும்பொழுது புழுதிகிளம்பி
மறைத்திடாமைப் பொருட்டு, தண்ணீர்தெளித்துப் புழுதிகளையடக்குவர்:
பூரணகும்பமும், விளக்கும் கொடியும் - அஷ்ட மங்கலங்களிற் சேர்ந்தவை.
பதாகை - பெருங் கொடி.  ஏழ் - ஏழுநிலைகளுக்கு எண்ணலளவையாகுபெயர்.
                                                        (277)

119.-விராடனும் கங்கப்பட்டனும்சூதாடுகையில், தோல்வியுற்ற
விராடன் ஒன்றுகூறல்.

மகன்வருமளவும்வெஞ்சூ தாடுதும்வருகவென்றாங்கு
அகமிகமகிழ்ந்துவேந்த னந்தணன்றன்னோடாட
மிகமுனியடுத்துவெல்லவென்றியுத்தரன்முன்மேவார்
இகலழிந்தென்னவிப்போ ரழிதிநீயெந்தையென்றான்.

     (இ - ள்.) ஆங்கு - அப்பொழுது, வேந்தன் - விராடராசன், அகம் மிக
மகிழ்ந்து - மனம் மிகவுங் களித்து, (கங்கபட்டனைநோக்கி) 'மகன் வரும்
அளவுஉம் - (எனது) புதல்வன் [உத்தரகுமாரன்] வரும்வரையிலும், வெம் சூது
ஆடுதும் - (மேன்மேல்) விருப்பத்தைத்தருகின்ற சூதாட்டத்தை (நாமிருவரும்)
ஆடுவோம், வருக - வருவாயாக,' என்று - என்று சொல்லி (வலிய அழைத்து),
அந்தணன் தன்னோடு ஆட-சந்நியாசியாகிய அக்கங்கபட்டனுடனே
சூதாடாநிற்க,- (அச்சூதாட்டத்தில்), முனி-கங்கபட்டன், அடுத்து - அடுத்தடுத்து,
மிக வெல்ல - மிகுதியாக [பல ஆட்டம்] ஜயிக்க,- (அப்பொழுது விராடன்
ஓராட்டந்தொடங்கிக் கங்கபட்டனை நோக்கி), 'எந்தை-எமது ஐயனே! வென்றி
உத்தரன் முன் - ஜயசாலியாகிய உத்தரனுக்கு எதிரில், மேவார் இகல் அழிந்து
என்ன - பகைவர்களான துரியோதனாதியர் வலிமை கெட்டமைபோல, இ
போர் - இனி ஆடும் இந்த