ஆட்டத்தில், நீ-, அழிதி - (என்முன்) தோற்பாய் [நான் உன்னை வெல்வேன்]', என்றான் - என்று சொன்னான்; (எ - று.) வெம்சூது - ஆடுவோர்க்கு மிக்கவிருப்பத்தைத்தருகின்ற சூதாட்டம்; "இழத்தொறுங் காதலிக்குஞ் சூது" என்றார் திருவள்ளுவனாரும். 'வெம்மை' என்ற சொல் விருப்பத்தையும் உணர்த்தும். கொடிய சூதென்று பொருள் கொள்ளுதல், இங்குச் சிறவாது. மகனது வெற்றியைப்பற்றித் தான்கொண்ட அளவிறந்த மனமகிழ்ச்சியால், அதனை இனித் தான் பெறும் வெற்றிக்கு உவமைகூறினன். படைகளைக்கொண்டு செய்யும் போரில் வெற்றி தோல்விகளால் இராச்சியத்தைப் பெறுதலும் இழத்தலும் நிகழ்தல்போல, காய்களைக் கொண்டு செய்யுஞ் சூதாட்டத்திலும் ஜயாபஜயங் காரணமாகப் பொருள்களைப் பெறுதலும் இழத்தலும் நேர்வது பற்றி, சூது 'போர்' எனப்பட்டது; உருவகம். அன்றியும், சூதாட்டத்தில் ஒருவர் தமது காயைக்கொண்டு எதிரியின் காயைக் கொல், அடி, வெட்டு என்று கூறிக் களைவதனாலும், சூதாட்டம் பேரெனத் தகும். முனிவனை 'எந்தை' என்று விளித்தது, சிறப்புப்பற்றி வந்த மரபுவழுவமைதி; எமது சுவாமி யென்றவாறாம். (278) 120, 121 - போர் வெற்றி பேடியினுடையதே யென்று கூறிக் கங்கபட்டன் பேடியைப்புகழ்ந்து பேசுதலைத் தெரிவிக்கும். என்றவன்மொழிந்தபோதிலெண்ணில்வெஞ்சேனையோடு வன்றிறலுரககேதுவலியழிந்துடைந்துபோக வென்றவன்பேடியேதன்மெய்ந்நடுங்காமற்போரில் நின்றுநின்சிறுவன்வெல்லவல்லனோநிருபரேறே.
பிருகந்நளையென்றோதும்பேடியைப்பேடியென்று கருதனீயவனேமுன்னங்காண்டவமெரித்தகாளை ஒருதனித்தடம்பொற்றேரூர்ந்தும்பருக்காகவும்பர் அரிகளையரிதின்வென்றானென்றனனந்தணாளன். |
இவ்விரண்டு செய்யுள்களும் - குளகம்; ஒருங்கு உரைக்கப்படுகின்றன.
(இ - ள்.) (120) என்று அவன் மொழிந்த போதில் - என்று அவ்விராட ராசன் சொன்னவளவில்,- (121) அந்தணாளன் - சந்நியாசியாகிய கங்கபட்டன்,- (விராடனைநோக்கி), - (120) 'நிருபர் ஏறே - அரசர்சிங்கமே! வல்திறல் உரககேது - மிக்கவலிமையையுடைய பாம்புக்கொடியனான துரியோதனன், எண் இல் வெம் சேனையோடு - கணக்கில்லாத கொடியசேனைகளுடனே, வலி அழிந்து உடைந்து போக - வலிமைகெட்டுத் தோற்றோடிப்போய் விடும்படி, வென்றவன் - (தானொருவனாகச்) சயித்தவன், பேடிஏ - (உத்தரனுக்குத் தேர் செலுத்திக்கொண்டுசென்ற) பேடிதான்; (அவனையன்றி), நின் சிறுவன் - உனது இளங்குமாரன், தன் மெய் நடுங்காமல் - (அச்சத்) |