தால்) தனதுஉடம்பு நடுக்கமடையாமல், போரில் - யுத்தத்தில், நின்று - எதிர்நின்று, வெல்ல வல்லன்ஓ - (துரியோதனாதியரைச்) சயிக்க வல்லமையுடையனோ? [அல்லனென்றபடி]; (அன்றியும்),- (121) பிருகந்நளை என்று ஓதும் பேடியை - பிருகந்நளையென்று (பெயர்) சொல்லப்படுகின்ற பேடிவடிவாயுள்ளவனை, நீ-, பேடி என்று கருதல்-(சாதாரணமான) பேடியென்று இழிவாக எண்ணாதே; (பின்னை யென்னவென்றால்), அவன்ஏ - அவன்தான், முன்னம் - முன்பு, காண்டவம் எரித்த காளை - காண்டவவனத்தை (அக்கினிக்கு உணவாகக் கொடுத்து) எரிப்பித்த வீரனான அருச்சுனனது, ஒரு தனி தட பொன் தேர் - ஒப்பற்ற தனித்த [வேறுதுணையில்லாத] பெரிய பொன்மயமான தேரை, ஊர்ந்து - செலுத்திச்சென்று, உம்பருக்கு ஆக - (இந்திரன் முதலிய) தேவர்கட்கு உதவியாக, உம்பர் அரிகளை - அத்தேவர்கட்குப் பகைவர்களாகிய அசுரர்களை, அரிதின் - அருமையாக, வென்றான் - சயித்திட்டான்,' என்றனன் - என்று சொன்னான்; (எ - று.) (120)பகைவரது வலிமையும் பரப்பும் தோன்ற 'எண்ணில் வெஞ்சேனையோடு வன்றிறலுரககேது' என்றும், உத்தரனது வலிமையின்மை தோன்ற 'சிறுவன்' என்றுங் கூறினன். ஆகவே, மெய்ந்நடுங்குதலும் எதிர்நில்லாமையும் இயல்பாயின. 'மெய்ந்நடுங்காமல்போரில்நின்று வெல்லவல்லனோ' என்றது - எதிர்நிற்கவும் வல்லனல்லன் வெல்லவும் வல்லனல்லன் என்றபடி. உருவத்தாற் பேடியே யன்றி ஆற்றலாற் பேடியன்றென்பது விளங்க, 'வென்றவன் பேடி' என ஆண்பாலாற் கூறினன். 'வென்றவன் பேடி' என்ற முடிபை, சொல்நிலைநோக்கிய முடிபன்றிப் பொருள் நிலைநோக்கிய முடிபென்னலாம். தருமபுத்திரன் உண்மையை உள்ளபடி உணர்த்தவேண்டு மென்று இவ்வாறு கூறினான். தமது அன்பர் காரணமின்றிச் செருக்குக்கொண்டால் அதனைத் தக்கவாறு கூறி யொழித்தல் ஆன்றோர் கடமை; அரசர்செருக்கிய விடத்து அமைச்சர் செயற்பாலதும் அது. (121)அருச்சுனன் பேடிவடிவங்கொண்டு விராடனிடம் வந்தபோது "ஏய வெஞ்சிலைக்கையருச்சுனன் கோயிலிருப்பதோர் பேடி நான்" என்று சொன்னதைக் கங்கபட்டன் நேரிற் கேட்டும், விரதசாரணி யென்னும் வண்ணமகளாகிய திரௌபதி அப்பேடியைக் குறித்துஉத்தரனிடம் "வித்தரம்பெறுதேர்விடும் விசயனுக் கிவள்" என்று சொன்னதைக் கேள்வியுற்று முள்ளானாதலால், அவற்றிற்கேற்ப 'அவனே முன்னங் காண்டவமெரித்த காளை யொருதனித் தடம் பொற்றேரூர்ந்து' என்றான். சத்தியவிரதனும் அந்தணாளனுமாகிய தருமபுத்திரனது இவ்வார்த்தை- 'அவனே முன்னம் காண்டவமெரித்த காளை: (மற்றும்), ஒப்பற்ற தனித்த பொன்மயமான பெரிய (இந்திரனது) தேரி லேறிச்சென்று தேவர்கட்காகத் தேவசத்துருக்களாகிய (நிவாதகவச காலகேய ரென்னும்) அசுரர்களை அருமையாக வென்றவன்' என்ற உண்மைப்பொருளையு |