யுடையவனைஇம்மைமறுமை யிரண்டிலும் கெடுக்கின்ற கொடுமைபற்றி, சினத்தை 'பாவி' என்றனரென்க; கொடியவனை 'பாவி' என்னும் வழக்கு இருத்தலால். (287) 129.-மாலைப்பொழுதில்உத்தரன் நகர்க்கு மீளுதல். ஆயிடையத்தக்குன்றுக்காதபனணியனாகச் சேயிடையெதிர்கொள்கொற்றச் சேனைமன்னவர்கள்சூழ வீயிடைவரிவண்டார்க்கும்வியன்பெருங்காவுநீங்கிப் போயிடைநெருங்கிவேந்தன்புதல்வனப்புரத்தைச்சேர்ந்தான். |
(இ -ள்.) அ இடை - அப்பொழுது, ஆதபன் - சூரியன், அத்தம் குன்றுக்கு அணியன் ஆக - அஸ்தமநகிரிக்குச் சமீபத்திற்சென்றவனாக [சாயங்கால மாகுஞ் சமயத்தில்],- வேந்தன் புதல்வன் - விராடராசனுடைய குமாரன் [உத்தரன்],- சேய் இடை எதிர்கொள் கொற்றம் சேனை மன்னவர்கள் சூழ - வெகுதூரம்வந்து தன்னை யெதிர்கொண்டு அழைத்துச் செல்லுகின்ற வெற்றியையுடைய சேனைத்தலைவர்கள் (தன்னைச்) சூழ்ந்து வர,-வீயிடை வரி வண்டு ஆர்க்கும் - மலர்களில் உடற்கோடுகளையுடைய வண்டுகள் மொய்த்து ஆரவாரிக்கப்பெற்ற, வியல் பெருங் காவு - அகன்ற பெரிய சோலையினின்று, நீங்கி போய் - புறப்பட்டுச் சென்று, இடை நெருங்கி - நடுவிடத்தைக் கடந்து நெருங்கி, அ புரத்தை சேர்ந்தான்-அந்தப் பட்டணத்தை யடைந்தான்; (எ - று.) அத்தக்குன்று, மேற்றிசையில் மேல்கடலைச் சாரவுள்ள தெனப்படும். தென்புறத்துப் பகை வென்று நிரைமீட்டுவந்தசேனையென்பதுபற்றி, 'கொற்றச்சேனை' என்றார். வரி - இசைப்பாட்டுமாம். அப்புரம் - விராடபுரம். (288) 130.-உத்தரன் வீதியில்உலாப்போதல். பரந்துவெம்படைகண்மின்னப்பல்லியம்பணிலமார்ப்பச் சுரந்துமும்மதமும்பாயுந்துதிக்கைவாரணங்கள்சூழப் புரந்தரனகரிற்காளப்புயல்வருமாறுபோல உரந்தருபேடிதன்றேரூரவேவீதியுற்றான். |
(இ -ள்.) (அங்ஙனஞ்சேர்ந்த உத்தரன்), - வெம் படைகள் - கொடிய ஆயுதங்கள், பரந்து மின்ன - பரவிப் பிரகாசிக்கவும், பல் இயம் - பலவகை வாத்தியங்களும், பணிலம் - வெற்றிச் சங்கத்தோடு, ஆர்ப்ப - ஆரவாரிக்கவும்,- சுரந்து மும் மதம்உம் பாயும் - ஊற்றெடுத்து [இடைவிடாமல்] மூன்றுவகை மதங்களும் பெருகப்பெற்ற, துதிக்கை வாரணங்கள் - துதிக்கையையுடைய யானைகள், சூழ - (தன்னைச்) சூழ்ந்துவரவும்,-புரந்தரன் நகரில் - தேவேந்திரனது பட்டணத்தில், காளம் புயல் வரும் ஆறு போல - கறுத்தமேகம் வருவதுபோல, உரம் தரு பேடி தன் தேர் ஊர - (தனக்கு) வெற்றியைக்கொடுத்த பேடியாகிய பிருகந்நளை தனதுதேரைச் செலுத்த, வீதிஉற்றான் - அந்நகரத்து வீதிகளின் வழியே சென்றான்; (எ - று.) |