பக்கம் எண் :

2பாரதம்விராட பருவம்

காளிந்திகரைஉம் ஏ - யமுனையின்கரையுமே, கமழும் - மணக்கப் பெற்ற,
பங்கயம் மலர்கள் - திருவடித்தாமரைகளை, நல் இரவுஉம்(நல்) பகல்உம்-நல்ல
இரவிலும் நல்லபகலிலும், பணிந்து - வணங்கி, அவன் புகழ் பாடுதும் -
அப்பரமனுடைய திருப்புகழைப் பாடுவோம்; (என்றவாறு).

      'பணிந்துபாடுதும்' என்று காயத்தினாலும் வாக்கினாலுஞ் செய்தற்கு
உரிய செயலைக் கூறியதனால், மனத்தினால் தியானித்தலும் பெறப்படும்:
ஆகவே, திரிகரணங்களும் பயன்பெறுஞ்செயலைச்செய்வோ மெனக்
கூறியவாறாயிற்று.  அவன்புகழ்பாடுதும்என்றதனால் இது வாழ்த்தாயிற்று.
திருமாலின் திருவடியினின்று கங்கைதோன்றிய தாதலால்,
அந்தக்கங்கைநீரின்மணம் அப்பிரான்திருவடியிலுள்ளதாகும்.  திருமால்
ஸ்ரீக்ருஷ்ணாவதாரத்தில் காளிய னென்ற கொடியநாகத்தின் நீண்முடியைந்திலும்
தனதுபா தங்களினானின்று நடஞ்செய்தானாதலால்
அந்தக்காளியன்முடியின்மணம் அவன் திருவடிகளிற் கமழு மென்றது.
க்ருஷ்ணன் தன்னுடைய இளமையில் யமுனைக்கரையில் திருவிளையாடல்கள்
புரிந்ததனால் அப்பிரான் திருவடியில் அக்கரையின் மணமும் கமழுமென்க.
சங்கை = சங்க்யை.

      இதுமுதல்இருபத்தெட்டுக்கவிகள் - பெரும்பாலும் இரண்டு நான்கு
ஏழாஞ்சீர் மாச்சீர்களும், மற்றவை விளச்சீர்களுமாகிவந்த எழுசீராசிரிய
விருத்தங்கள்.                                                 (1)

2.-பாண்டவர் பன்னிரண்டியாண்டு வனவாசம் கழித்தமை.

அரவவெங்கொடியோனேவலின்படியே யைவருமாறிரண்டாண்டு
துருபதனளித்தபாவையுந்தாமுஞ்சுருதிமாமுனிகணம்பலவும்
பரிவுடன்மலரும்பலங்களுங்கிழங்கும்பாசடைகளுமினிதருந்தி
ஒருபகல்போலக்கழித்தனரறிவுமொடுங்கியபுலன்களுமுடையோர்.

      (இ -ள்.) வெம் அரவம் கொடியோன் ஏவலின் படி ஏ - வெவ்விய
பாம்புக்கொடியை யுடையவனாகிய துரியோதனனுடைய கட்டளையின்படியே,
ஆறு இரண்டு ஆண்டு - பன்னிரண்டுவருஷகாலம், ஐவர் உம் -
பஞ்சபாண்டவர்களும்,- துருபதன் அளித்த பாவைஉம் - துருபதன்
(வேள்வியின் மூலமாகப்) பெற்ற பிரதிமைபோன்றவளாகிய திரௌபதியும்,
தாம்உம் - தாங்களும், சுருதி மா முனி கணம் பல உம் - வேதங்களில்வல்ல
சிறந்த இருடியர்கூட்டம்பலவுமாக, (இருந்து),-பரிவுடன் - மனத்திலன்போடு,
மலர்உம் - புஷ்பங்களும், பலங்கள்உம் - பழங்களும், கிழங்குஉம்-, பசு (மை)
அடைகள் உம் - பசிய இலைகளும், இனிது அருந்தி - இனிமையாக உண்டு,-
அறிவு உம்- விவேகமும், ஒடுங்கிய புலன்கள்உம் உடையோர்-அடங்கிய
ஐம்பொறிகளையுமுடையவராய், ஒருபகல்போல கழித்தனர் - ஒருபகலைப்
போலப் போக்கினார்கள்; (எ - று.)

      பாண்டவர்கள்அறிவையும் அடங்கிய பொறிகளையுமுடையவராதலால்,
காட்டிற்கிடைத்த மலர்முதலிய உணவுகளை மனத்திருத்தி