இகழ்ந்தமைநுவலும்போதைக்கெல்லையின்றிவனைப்போல அகழ்ந்தநீராடைஞாலத்தார்கொலோவமைவின்மிக்கோர். |
இதுவும், அடுத்த கவியும் - ஒருதொடர். (இ -ள்.) (அதுகண்ட உத்தரன்), 'திகழ்ந்த நின் நுதலின் - விளங்குகின்ற உனது நெற்றியிலே, ஊறு செய்தவர் - வடுப்படுத்தியவர், யார் கொல் -யாரோ?' என்ன - என்று (அக்கங்கபட்டனை) வினாவியவளவில், நிகழ்ந்தமை- நடந்தசெய்தியை, தந்தை - தந்தையான விராடன், கூற - சொல்ல,-(கேட்டறிந்த உத்தரன்), நெஞ்சினால் - (தன்) மனத்தினால், தந்தை தன்னை -(தன்) பிதாவான அவ்விராடனை, இகழ்ந்தமை - வெறுத்ததை, நுவலும்போதைக்கு - சொல்லுமளவுக்கு, எல்லை இன்று - ஒரு வரையறையில்லை,(அங்ஙனம், மிகவெறுத்தபின்பு உத்தரன்), 'இவனை போல - இம்முனிவனைப்போல, அமைவின் மிக்கோர் - பொறுமையிற் சிறந்தவர், அகழ்ந்த நீர் ஆடை ஞாலத்து - (சக்ரசக்கரவர்த்திகுமாரர்களால்) தோண்டப்பட்ட கடலை ஆடையாகவுடைய [கடல்சூழ்ந்த] இந்நிலவுலகத்தில், ஆர் கொல்ஓ - வேறு யாருளரோ? [எவருமில்லை யென்றபடி]; (எ - று.) அமைவாவது - காரணம்பற்றியாவது, பேதைமையாலாவது ஒருவன் தமக்குக் குற்றஞ்செய்தவிடத்துத் தாமும் அவனுக்கு அதனைச்செய்யாது பொறுத்தல். மிகுதியாக இகழ்ந்தது - அம்முனிவனைத் தருமபுத்திரனென்று தானறிந்ததனாலும், "வென்றவன் பேடியே" என்று அவன் கூறியது உண்மையேயாக அதுபற்றி விராடன் அவனைச்சினந்து கவறு கொண்டெறிந்தது பெருந்தீங்காதலாலு மென்க. ஐம்பெருங்குரவரிலொருவனாகிய தந்தையைச் சொற்செயல்களால் வெறுத்தல் கூடாமையாலும், மனம் பொறாமையாலும், நெஞ்சினா லிகழ்ந்தான். (292) 134.-உத்தரன் தந்தையும்தானுமாய்த் தருமனை வணங்கிச் சினந்தீர்த்தல். செறுப்பதுபெருமையன்றுசிறியவர்செய்ததீமை பொறுப்பதேபெருமையென்றுபூசுரன்பாதம்போற்றி வெறுப்பதுவிளைத்ததாதைவீழ்ந்தபின்றானும்வீழ்ந்து மறுப்பதுபுரியாஞானிமனத்துனியகற்றினானே. |
(இ -ள்.) 'சிறியவர் செய்த தீமை - சிறியோர்செய்த தீங்கை, செறுப்பது - வெறுத்துக் கோபிப்பது, பெருமை அன்று - பெருந்தன்மையன்று; பொறுப்பதுஏ - (அதனைப்) பொறுத்துக்கொள்வதே, பெருமை - பெருந்தன்மையாம்,' என்று - என்றுசொல்லி, வெறுப்பது விளைத்த தாதை வீழ்ந்தபின் - வெறுக்கத்தக்க [தீய] காரியத்தைச் செய்த தந்தையான விராடன் (கங்கபட்டனது பாதங்களில்) விழுந்து நமஸ்கரித்தபின்பு, தான்உம் - (மைந்தனாகிய) தானும், பூசுரன் பாதம் - அந்தணனாகிய அக்கங்கபட்டனது பாதங் |