பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 205

யெதிரிற்கண்ட யானைக்கூட்டங்கள் போலவும், நெருப்பு எதிர்ந்த
பதங்கம்போல் - விளக்கையெதிர்த்த விட்டிற்பறவைகள்போலவும், நிரை
போக்கி அழிந்தார் - (அவ்வருச்சுனனைக் கண்டமாத்திரத்தில் தாம் கவர்ந்த)
நிரையைப் போகவிட்டுத் தோற்றோடிப்போனார்கள்;

     இப்பாடலால் அருச்சுனனே பிருகந்நளையென்ற பேடியாயிருந்தமை
யையும், அவனைக் கண்டதும் பகைவர் நிரையை விட்டுவிட்டுத்
தோற்றோடினமையையுங் கூறுகின்றான்.  அருச்சுனனைக்கண்டதும் அழிந்த
பகையரசர்க்குச் சூரியனைக்கண்ட இருளையும், அரியேற்றைக் கண்ட
கரியையும், விளக்கைக்கண்ட விட்டிலையும் உவமைகூறினான்; உவமையணி.
உருப்பசி என்ற பெயர் - தொடையினின்று பிறந்தவளென்று பொருள்படும்:
ஊரு - தொடை.  நாராயணமுனிவரது தொடையினின்று பிறந்தவ ளாதலால்,
இவள் இப்பெயர் பெற்றனள்.  குருசிஷ்யக் கிரமத்தை உலகத்தார்க்கு
உணர்த்துதற்பொருட்டு விஷ்ணுவின் அம்சமாய்க் குருவும் சிஷ்யனுமாகத்
திருவவதரித்த நாராயணன் நரன் என்ற முனிவர்கள் பதரிகாச்சிரமத்தில் தவஞ்
செய்துகொண்டிருக்கையில் இந்திரனேவலால் அப்ஸரஸ் ஸ்திரீகள் பலர்
அங்குவந்து தங்களுடைய மேனிமினுக்கினாலும் ஆடல் பாடலாதி
வினோதங்களாலும் அவர்களுடைய தவத்துக்கு இடையூறு செய்யத் தொடங்க,
அதனாற் சிறிதுங்கலங்காத அவர்களுள் நாராயணமுனிவர் அம்மகளிரை
அவமானப்படுத்தக்கருதித் தமது தொடையினின்று ஒருகட்டழகியைச்
சங்கற்பத்தா லுண்டாக்க, அவளது ஒப்புயர்வற்ற திவ்விய சௌந்தரியத்தை
நோக்கி அத்தேவமாதர்கள் மிக வெள்கி அவளையே தங்கட்குத்
தலைவியாகக்கொண்டு அவளுடன் தமது உலகத்துக்குச்சென்றன ரென்பது
வரலாறு.  போக்கி அழிந்தார் - அழிந்துபோக்கினார் என விகுதிபிரித்துக்
கூட்டுக.

     இதுமுதல் இச்சருக்கம் முடியுமளவு முள்ள நான்குகவிகள் -
பெரும்பாலும் ஒன்று இரண்டு ஐந்து ஆறாஞ்சீர்கள் காய்ச்சீர்களும், மற்றை
நான்கும் மாச்சீர்களுமாகிய கழிநெடிலடி நான்குகொண்ட
எண்சீராசிரியவிருத்தங்கள்.                                
(297)

139.அருகுவிடாதுனக்குயிர்நண்பாகிநீதி யறமுரைப்போன
                      றத்தின்மகனாகவேண்டும்,
மருமலருமான்மதமும்துறந்தகூந்தல்வண்ண
                மகள்பாஞ்சாலன்மகளேபோலும்,
வெருவருமற்போர்கடந்தமடையன்றன்னை
          வீமனெனவயிர்க்கின்றேன்வேந்தேமற்றை,
இருவரினுமாவலானகுலன்றானேயின்னிரையின்
                        காவலானிளையகோவே.

      (இ -ள்.) வேந்தே - அரசனே! உனக்கு உயிர் நண்பு ஆகி - உனக்கு
உயிர்போன்ற சிநேகிதனாய், அருகு விடாது - (உன்) சமீபத்தை விடாமல்
[எப்பொழுதும் உனது அருகில் இருந்துகொண்டு], நீதி அறம் உரைப்போன் -
நியாயங்களையும் தருமங்களையும் (அப்பொழுதைக்கு