பக்கம் எண் :

நிரை மீட்சிச் சருக்கம் 207

 

                      தன வானயந்துகேண்மோ,
வேளையேயனையவெழிற்றோகைவாகை
           வேளையேயனையவிறல்விசயனென்னுங்
காளையேயடியேனுக்கிளையகாதற்
              கன்னிகைக்குவரனென்றுகருதுவாயே.

      (இ -ள்.) ஆளைஏ அடும் களிற்றார் - பாகனானவனைக் கொல்லுந்
தன்மையுள்ள யானைச்சேனையையுடையவரான பாண்டவர்கள், தம்மை -,
யார்உம் அறியாமல் - எவரும் அறியாதபடி, இ நகர்க்கண் - இந்த நகரத்தில்,
அடங்கிநின்றார் - (இதுவரையில்) மறைந்திருந்தார்கள்; நாளைஏ வெளிப்படுவர்
- நாளைக்கே வெளிப்படுவார்கள்:  நெருநல்ஏ - நேற்றே, தம் நாள் உள்ள
கழிந்தன - தாம் கழிக்க வேண்டியனவாயிருந்த அஜ்ஞாதவாச தினங்கள்
கழிந்துவிட்டன; நயந்து கேண்மோ - (யான் இப்பொழுது சொல்வதை)
விரும்பிக் கேட்பாயாக:  வேளைஏ அனைய - மன்மதனையேபோன்ற, எழில் -
அழகையும், தோகை வாகை வேளைஏ அனைய - மயில்வாகனத்தையும்
வெற்றிமாலையையுமுடைய முருகக்கடவுளையே போன்ற, விறல் -
வெற்றியையுமுடைய, விசயன் என்னும் - அருச்சுனனாகிய, காளைஏ - வீரனே,
அடியேனுக்கு இளைய - எனக்குத் தங்கையாகிய, காதல் கன்னிகைக்கு -
அன்புமிக்க உத்தரைக்கு, வரன் - ஏற்ற கணவன், என்று -, கருதுவாய் -
எண்ணுவாயாக; (எ - று.)

     இதனால், பாண்டவர்களைவரும் அஜ்ஞாதவாசத்தை இங்குக் கழித்தன
ரென்பதையும், உத்தரையை அருச்சுனனுக்கு மணம்
புரிவிக்கவேண்டுமென்றதையும் கூறுகின்றான்.  மதயானை தனக்கு
ஆவனசெய்து தன்னையடக்கி யாளும் பாகன்மீது முன்பு தன்னை அவன்
கடிந்தமைபற்றிக்கறுக்கொண்டு அவனைக் கொல்லுமியல்பினதாதலால்,
'ஆளையே யடுங்களிறு' எனப்பட்டது.  நால்வகைச்சேனையுள்ளும்
"படைதனக்கி யானைவனப்பாகும்" என்றபடி சிறப்பதாகிய யானையைத்
தலைமைபற்றி யெடுத்துக் கூறியது மற்ற மூன்றுக்கும் உபலக்ஷணம்.  இனி,
களிற்றார் - யானைபோன்றவ ரெனினுமாம்; கோபத்தை
மறைத்தற்குரியகாலத்தே மறைத்து வெளிப்படுத்தற்குரியகாலத்தே
வெளிப்படுத்துந் தன்மைக்கும், வலிமைக்கும், நடைக்கும், காம்பீரியத்துக்கும்
உவமை.  ஆளையே, வேளையே என்றவற்றில், ஏகாரம் - உயர்வுசிறப்பு.
நாளையே, நெருநலே, காளையே என்றவற்றில் ஏகாரம் - தேற்றம்.  'வாகை'
என்ற மரத்தின்பெயர் - அதன் மலர்களாலாகிய மாலைக்கு
இருமடியாகுபெயராம்.  வாகைப்பூமாலை, போரில் வென்றவர் சூடுவது.
மூன்றாமடியில் 'வேளையே' என்ற சொல் வெவ்வேறு பொருளில்
அடுத்துவந்தது - மடக்கு என்னுஞ் சொல்லணி.          (299)

141. இவைகேட்டு விராடன்மகிழ்தல் முதலியன

 மகனிவைமற்றுரைத்தளவிற் றாதை கேட்டு மனநடுங்கி
                    நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சி கூர்ந்தான்,
பகலமரி லேறியமெய்ப் பராக மாறப் பகலோனும் புனல்படிவான்
                                   பரவைசேர்ந்தான்,