பக்கம் எண் :

வெளிப்பாட்டுச் சருக்கம் 213

பழுது ஆகும்-தவறாம், என - என்று, முன்னவன் - மூத்தவனாகிய தருமன்,
மொழிந்தான் - சொன்னான்; (எ - று.)

     சினமிகுதலின் முனிதல் எனக் கூட்டி யுரைப்பினுமாம்.  அனலின்
முதிர்கானகம் என்றும் பாடம்.                                 (307)

8.-பாண்டவரின்வெளிப்பாட்டை யறிந்த விராடன்
தன்மைந்தனோடும்திறைப்பொருளோடும்
பாண்டவர்பாதங்களில் வீழ்தல்.

குந்திவயின்வந்துதமகுருகுலம்விளக்கும்
ஐந்தரசுமன்றுதனகன்கடையிருக்கச்
சிந்தனையொடுந்திறைகொள்செல்வநிதியோடும்
மைந்தனொடுமெய்தியவர்மலரடியின்வீழ்ந்தான்.

      (இ -ள்.) குந்தி வயின் வந்து - குந்திதேவியினுடைய வயிற்றிலே
பிறந்து,தம குருகுலம் விளக்கும் - தங்களுடைய குருகுலத்தை விளக்குபவரான,
ஐந்துஅரசுஉம் - பாண்டவராசர்கள் ஐந்துபேரும், அன்று - அப்போது, தன்
அகன்கடைஇருக்க - தன்னுடைய பரந்த இடத்திலே யிராநிற்க,-
சிந்தனையொடுஉம் -கவலையுடனே, திறை கொள் செல்வம் நிதியோடுஉம் -
(தான்) திறையிற்பெற்றபொருட்செல்வத்தோடும், மைந்தனொடுஉம் - (தன்)
புத்திரனானஉத்தரனென்பவனோடும், எய்தி-(பாண்டவரிருக்குமிடத்திற்குப்)
போய்,  அவர்மலர் அடியின் வீழ்ந்தான் - அந்தப் பாண்டவரின்
தாமரைபோன்றபாதங்களில் வீழ்ந்து கும்பிட்டான்;

     சிந்தனை - இந்தப்பாண்டவர் வேற்றுருவோடு நம்மிடத்து வசிக்கையில்
அவர்களைப் பணியாளராகக்கொண்டு நடத்தினோமே என்பது
கருதியதனாலாகியது:  மேல் 13-ஆங் கவியில் "மனனிடரகற்றி" என வருதல்
நோக்குக.  சிந்தனையென்றசொல் கவலையென்னும் பொருளில் வருதலை
"சிந்தனை முகத்திற்றேக்கி" என்ற இடத்துங் காண்க.                (308)

9.-தருமன் விராடனைத்தழுவிப் புகழ்தல்.

விராடனைநறுங்குவளைமாலைவியன்மார்பில்
தராபதியெழுந்தெதிர்தழீஇயினனிருத்திப்
பராவருபெரும்புகழ்படைத்தவருனைப்போல்
அராவின்முடிமேலுலகிலார்கொலுளரென்றான்.

      (இ -ள்.) தராபதி - பூமிக்கெல்லாந்தலைவனாகிய தருமன்,-எதிர்எழுந்து
- எதிராக (த்தன்னிருக்கையினின்றும்) எழுந்திருந்து, விராடனை-, நறுங்
குவளை மாலை வியன் மார்பில் - நறிய குவளைமலர் கொண்டுதொடுத்த
மாலையைணிந்த (தன்) பரந்த மார்பிலே, தழீஇயினன் - தழுவினவனாய்,
இருத்தி - உட்காரவைத்து, (அவனைநோக்கி),-'உனை போல் -
உன்னைப்போல், பராவருபெரும் புகழ் படைத்தவர் - கொண்டாடத்தக்க மிக்க
கீர்த்தியை யடைந்