பக்கம் எண் :

216பாரதம்விராட பருவம்

அறத்தின்மகனுக்கு - தருமபுத்திரனுக்கு, இவை இசைப்பான் -
இவ்வார்த்தைகளைக் கூறலானான்; (எ - று.) - உத்தரன் உரைப்பவற்றை மேற்
கவியிற் காண்க.                                             (313)

14.-உத்தரன் கூறியன.

எத்தரையுநீழல்செய்தனிக்கவிகையெந்தாய்
இத்தரையுநின்னதுநின்னேவலினர்யாமும்
பத்தரையொடீரரைகொள்பல்படையுநினவே
உத்தரையும்வில்விசயனுக்குரியளென்றான்.

      (இ -ள்.) (தருமபுத்தரனை நோக்கி உத்தரன்),- 'எ தரைஉம் - பூமி
யெங்கும், நீழல் செய் - நிழலைச்செய்கின்ற, தனி கவிகை - ஒப்பற்ற
வெண்கொற்றக்குடையையுடைய, எந்தாய் - எமது தந்தைபோன்றவனே!்இ
தரைஉம் - இந்தமச்சதேசமும், நின்னது - உன்னுடையதே:  யாம்உம் -
நாங்களும், நின் ஏவலினர் - உன் கட்டளையின்படி நடப்பவரே யாவோம்:
பத்தரையொடு ஈர் அரை கொள் பல் படைஉம் - அறுவகைப்படையும், நினஏ
- உன்னுடையனவே:  உத்தரைஉம் - (என்னுடன் பிறந்தவளான)
உத்தரையென்பாளும், வில் விசயனுக்கு - விற்போரில்வல்ல அருச்சுனனுக்கு,
உரியள் - உரியவளாவள்,' என்றான் - என்று கூறினான்; (எ - று.)

     அறுவகைப் படைகளாவன - நாட்டுப்படை காட்டுப்படை பகைப்படை
துணைப்படை கூலிப்படை மூலப்படையென்பன.  தரை - தரா என்ற
வடசொல்லின்திரிபு:  பூமியென்று பொருளுள்ள இச்சொல்,
அதன்ஏகதேசமாகியநாடுஎன்ற பொருளில் வந்தது: "மாயோன்மேய
காடுறையுலகமும்" என்ற இடத்து உலகம் என்றதுபோல.             (314)

15.-அருச்சுனன் 'உத்தரைஎன்மகனுக்கு மனைவியாதற்கு
உரியள்' எனல்.

வில்விசயனுத்தரன்விளம்புதலும்வீரம்
கல்விசெய்கலைத்திறன்வனப்புடையகாளாய்
இல்விசயமெய்க்குணனின்மிக்கவிளையாளென்
தொல்விசயமுற்றசுதனுக்குரியளென்றான்.

      (இ -ள்.) உத்தரன் விளம்புதலும் - உத்தரகுமாரன் (இவ்வாறு) கூறவே,-
வில் விசயன்-, (உத்தரகுமாரனைநோக்கி),- 'வீரம் - வீரமும், கல்வி-படிப்பும்,
செய் கலை - செய்யப்படுகின்ற அறுபத்துநான்கு கலைத்தொழிலும், திறன் -
வல்லமையும், வனப்பு - அழகும், உடைய-, காளாய் - இளவெருது
போன்றவனே! இல் விசயம் மெய் குணனில் மிக்க இளையாள் -
இல்லறத்திற்குஉரிய மேம்பட்ட உண்மையான நற்குணங்களாற் சிறந்த
இளையவளான உத்தரை, என் - என்னுடைய, தொல் விசயம் உற்ற -
பழமையாக வெற்றியையே பெறுதல்பொருந்திய, சுதனுக்கு - புத்திரனாகிய
அபிமனென்பவனுக்கு, உரியள் - மனைவியாதற்குஉரியாள்,' என்றான் - என்று
கூறினான்; (எ - று.)-எல்விசயமுற்றசுதன் என்றும் பாடம்.            (315)