பக்கம் எண் :

வெளிப்பாட்டுச் சருக்கம் 217

வேறு.

16.-பாண்டவர்எல்லாத்திசையிலுமுள்ள சுற்றத்தார்க்குத்
 தம் செய்தியைத் தூதர்மூலமாகச்  சொல்லியனுப்புதல்.

விசயம் றொகுத்து நயமாக விராடனெஞ்சுக்கு
இசையும் படிசொற் றவரோடுமிருந்த பின்னர்
வசையின்றி வாழுந் தமராகியமன்னர்க் கெல்லாத்
திசையுந் தமது செயறூதரிற்செப்பி விட்டார்.

      (இ -ள்.) விசயன் - அருச்சுனன், தொகுத்து - சுருக்கமாக, நயம் ஆக
-இனிதாக, விராடன் நெஞ்சுக்கு இசையும்படி - விராடன் மனத்துக்குப்
பொருந்தும்படி, சொற்று - (உத்தரையை அபிமனுக்கு மனைவியாக்குதல்
முதலியவற்றைக் குறித்துச்) சொல்லி, அவரோடு உம் இருந்த பின்னர் - அந்த
விராடன் முதலியவரோடும் சேர இருந்தபிறகு,- (அப்பாண்டவர்). - வசை
இன்றி - குற்றமில்லாமல், வாழும் - வாழ்பவராகி, தமர் ஆகிய - தமது
சுற்றத்தாராகிய, மன்னர்க்கு - அரசர்பொருட்டு, எல்லாம் திசைஉம் -
எல்லாத்திக்குக்களிலும், தமது செயல் - (வெளிப்பட்ட) தமதுவரலாற்றை,
தூதரின் - தூதர்மூலமாக, செப்பி விட்டார் - சொல்லியனுப்பினார்கள்;(எ-று.)

     இதுமுதற் பதினைந்துகவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று
காய்ச்சீரும், மற்றையவை மாச்சீர்களுமாகிவந்த நெடிலடி நான்குகொண்ட
கலிநிலைத்துறைகள்.                                          (316)

17.-பாண்டவரின்வெளிப்பாட்டையறிந்து ஸ்ரீக்ருஷ்ணன்
தன்துணைவர் முதலியவரோடு பாண்டவருள்ள இடத்துக்கு
வருதல்.

வெளிநின்றமாற்றம்வெளியானபின்வெண்டயிர்த்தண்
துளிநின்றமேனித்துளவோன்றன்றுணைவரோடும்
அளிநின்றமாலைபுனைதங்கையபிமனோடும்
தெளிநின்றவேற்கைச்சிவேதன்னொடும்வந்துசேர்ந்தான்.

      (இ -ள்.) வெளி நின்ற மாற்றம் - (பாண்டவர்) வெளிப்பட்டு விட்டன
ரென்ற சொல், வெளி ஆன பின் - வெளிப்பட்டபின்பு, வெள் தயிர் தண் துளி
நின்ற மேனி - வெள்ளியதயிரின் தண்ணிய துளி தங்கப்பெற்ற திருமேனியைக்
கொண்டிருந்தவனாகிய, துளவோன் - திருத்துழாய்மாலைசூடுந் திருமாலி
னவதாரமாகிய ஸ்ரீகிருஷ்ணன், தன் துணைவரோடுஉம் - தன்னுடன்
பிறந்தவரான பலராம சாத்தியகியருடனும், அளி நின்ற மாலை புனை தங்கை
(யோடும்) - வண்டுகள்தங்கிநின்ற மாலையையணிந்த தங்கையான
சுபத்திரையோடும், அபிமனோடுஉம் - (அவளுக்குப்புதல்வனான)
அபிமனுடனும், தெளி நின்ற வேல் கை சிவேதன்னொடுஉம் - தெளிவாகநின்ற
[கூர்மையுள்ளதாய் விளங்குகின்ற] வேற்படையேந்திய கையையுடைய
சிவேதனுடனும், வந்து சேர்ந்தான்-;

     ஸ்ரீக்ருஷ்ணன் குழந்தைப்பருவத்தில் நந்தகோபனில்லில் வளர்ந்தபோது
வெண்டயிர்த்தண்டுளி மேனியுடன் தோன்றின