னென்க. மூன்றாமடியில், அளிநின்ற நெஞ்சிற் குருமைந்தரறுவரோடும் என்றும் பாடம். (317) 18.-தருமபுத்திரன்முதலியோரைக்கண்டு மகிழ்ந்து ஸ்ரீக்ருஷ்ணன் அவரோடும் எண்ணிப்பல பேசுதல். கண்டான்மகிழ்ந்தானறன்மைந்தனைக்கைதழீஇயும் கொண்டானவன்றனிளையோர்கைகுவித்துவீழ்ந்தார் எண்டானவரோடிசைந்தெண்ணிப்புவனமேழும் உண்டானுரைத்தானுரைத்தக்கவுரைகளெல்லாம். |
(இ -ள்.) (வந்து சேர்ந்த ஸ்ரீகிருஷ்ணன்),- அறன் மைந்தனை கண்டான் மகிழ்ந்தான் - (வனவாச அஜ்ஞாதவாசங்களைச்செய்து கழித்து வெளிப்பட்ட) தருமபுத்திரனைக் கண்டு மகிழ்ந்தான்: கை தழீஇஉம் கொண்டான் - (தன்) கைகளால் தழுவியும் அணைத்தான்: அவன்தன் இளையோர் - அந்தத் தருமனுடைய தம்பிமார், கைகுவித்து வீழ்ந்தார்-(ஸ்ரீக்ருஷ்ணனைக்) கைகூப்பி வணங்கித்தொழுதார்கள்: அவரோடு - அந்தப்பாண்டவரோடு,-புவனம் ஏழ்உம் உண்டான் - ஏழுலோகங்களையும் உண்டவனான திருமாலினவதாரமான ஸ்ரீக்ருஷ்ணன்,- எண் இசைந்து எண்ணி - ஆலோசனைகளை மனமொத்திருந்து ஆலோசித்து, உரைத்தக்க உரைகள் எல்லாம் உரைத்தான் - சொல்லத்தக்க வார்த்தைகளையெல்லாஞ் சொன்னான்; (எ - று.) - எண்டானவனோடியைந்து என்று பிரதிபேதம். தான் - அசை. (318) 19.-சிவேதன்செய்கையையெல்லாம் சொல்லி ஸ்ரீக்ருஷ்ணன் விராடன்கவலையைப் போக்குதல். சிவன்றன்னைநோக்கிச்சிவேதன்றவஞ்செய்தவாறும் அவன்றன்னருளாற்பலவாயுதம்பெற்றவாறும் இவன்றன்பகைசெற்றதும்யாவுமியம்பியுள்ளம் கவன்றன்புறாமன்விராடன்கவற்சிதீர்த்தான். |
(இ - ள்.) சிவன் தன்னை நோக்கி - சிவபெருமானைக் குறித்து, சிவேதன் தவம் செய்த ஆறுஉம் - சிவேதன் தவஞ்செய்த விதத்தையும், அவன் தன் அருளால் - அந்தச் சிவபெருமானுடைய திருவருளினால், பல ஆயுதம் பெற்ற ஆறுஉம் - (இந்தச்சிவேதன்) பலபடைக்களலங்களைப் பெற்றவகையையும், இவன் தன் பகை செற்றதுஉம் - இந்தச்சிவேதன் தன்பகையை யழித்ததையும், யாவும் - எல்லாவற்றையும், இயம்பி - (விராடனிடம்) சொல்லி, (வெகுநாளாகச் சிவேதனது பிரிவினால்), உள்ளம் கவன்று - மனம் வருந்தி, அன்பு உறா - மனக்கசிவு கொள்ளாம லிருந்த, மன் விராடன் தன் - விராடமன்னவனுடைய, கவற்சி - துன்பத்தை, தீர்த்தான்-; சிவேதன் முன்னொருகாலத்தில் தேவலோகத்திற் போயிருந்த பொழுது வசுக்கள் அவனை மயிலென்னும் பறவையாகும்படி சபித்து அவன்பேரெழுதிய அம்பொன்றை அவன்மே லெறிய, அதுபட்ட |