வுடனே அவன்மயிலாகித்தந்தையாகிய விராடனிடம் வந்துசேர, அதனையறியாத அவன் கோபித்துத் துரத்திவிட, மைந்தன் பறந்து சென்று தவஞ்செய்து சிவபிரானருளாற் சாபவிடைபெற்று வில் முதலிய ஆயுதங்களும் கவசங்களும் பெற்றன னென்பர். இவன் தன் பகைசெற்ற விவரம் தெரியவில்லை; ஒருசாரார் ஸ்ரீகிருஷ்ணன் இந்தச்சிவேதனைக்கொண்டு தன்பகையை யொழித்துக்கொண்டானென்று பொருள் கூறுவர்; அதற்குஉரிய சரித்திரமும் தெரியவில்லை. அன்புறாமல் என்று பிரதிபேதம். (319) 20.-தன் தந்தையின்தாளிற்சிவேதன் வீழ்ந்துபணிதல். தெம்மைந்தரென்னுங்களபங்களைச்சிங்கசாப வெம்மைந்தின்வேறற்கமைந்தானொருவீரனான கன்மைந்தனைக்கண்டுருகுந்திறற்றந்தைதாளில் அம்மைந்தனும்வீழ்ந்துடன்வைகினனார்வமிக்கே. |
(இ -ள்.) தெம் மைந்தர் என்னும் களபங்களை - பகைவீரராகிய யானைக்கன்றுகளை, சிங்கசாபம் வெம் மைந்தின் - சிங்கக்குட்டியின் வலிமைபோன்ற வெவ்விய வலிமையினால், வேறற்கு - வெல்லுதற்கு, அமைந்தான் - பொருந்தினவனாகி, ஒரு வீரன் ஆன - ஒப்பற்ற வீரனான, தன் மைந்தனை - தன் புத்திரனை, கண்டு -, உருகும் - உருகுகின்ற, திறல் - வலிமையையுடைய, தந்தை - தமப்பனாகிய விராடனுடைய, தாளில் - பாதங்களில், அ மைந்தன்உம் - அந்தப்புத்திரனாகிய சிவேதனும், வீழ்ந்து - பணிந்து, ஆர்வம் மிக்கு - அன்புமிகுந்து, உடன் வைகினன் - தந்தையுடனேசேர்ந்து தங்கினான்; (எ - று.) மைந்து- வீரம், இளமை: அதனையுடையவன் - மைந்தன்: எனவே, வீரன், புதல்வன்என்ற பொருளைக் காட்டும். களபம் - யானைக்கன்று: ஸிம்ஹஸாவெ:-சிங்கக்குட்டி: வடசொற்கள். "வெம்மைந்தின் வேறற்கமைந்தோரொருவீரரான, தம்மைந்தரைக்கண்டுருகுந் தந்தையர் கடாளி, லம்மைந்தரும் வீழ்ந்துடன் வைகினரார்வமிக்கே" என்று ஒருபாடம் பதினேழாஞ்செய்யுளின் பாடபேதத்திற்கு ஏற்பக் காண்கின்றது. (320) 21.-பாஞ்சாலர்முதலியோர்அங்குச் சேனையோடும் வருதல். பாஞ்சாலர்போசகுலமன்னவர்பாண்டிவேந்தர் வாஞ்சாமனத்தின்வயமத்திரர்மாகதேயர் பூஞ்சாபவெற்றிக்கொடிக்கேரளர்பொன்னிநாடர் தாஞ்சால்புடனப்பதிவந்தனர்தானையோடும். |
(இ -ள்.) பாஞ்சாலர் - பாஞ்சாலர்களும், போசகுலமன்னவர் - போசகுலராஜாக்களும், பாண்டிவேந்தர் - பாண்டியமன்னவரும், வாஞ்சா மனத்தின் வயமத்திரர் - விருப்பங்கொண்ட மனத்தினையுடைய வலிய மத்திரதேசத்தாரும்,மாகதேயர் - மகததேசத்தவரும், பூஞ் சாபம் வெற்றி கொடி கேரளர் - அழகியவில்லை(த் தமது) வெற்றிக்கு அடையாளமாகக் கொடியிலேகொண்டசேரதேசத்து மன்னவரும், பொன்னிநாடர் - சோழநாட்டு மன்னவரும், தாம் -(ஆகிய) |