பக்கம் எண் :

220பாரதம்விராட பருவம்

இவர்,தானையோடுஉம் - சேனையுடனே, சால்புடன்-நிறைகுணத்தோடு, அ
பதி வந்தனர் - (பாண்டவரிருந்த) அவ்விராட நகரத்து வந்து சேர்ந்தார்கள்;
(எ- று.)

      சால்பு- மனவமைதியுமாம்.  பொன்னைக் கொழித்துக்கொண்டு
வருதலால், காவேரிக்குப் பொன்னியென்று ஒருபெயர்.  காவேரியால் மிக்க
வளம்பெற்றது சோழநாடே யாதலால் அது 'பொன்னிநாடு' எனப்படும்.  (321)

22.-காட்டில் நெடுநாள்வசிக்கலாயிற்றே என்று
பாண்டவரைக் கண்டு வருந்திக் கூறும் நிருபர்க்குத் தருமன்
கூறலுறுதல்.

வந்தோகையோடுமிருபாதம்வணங்கிவைகும்
கந்தோடடர்கைக்கடுங்கோபக்களிற்றுவேந்தர்
அந்தோநெடுநாளகன்கானிலடைந்திரென்று
நொந்தோரையாற்றிநுவல்வானந்நுதிகொள்வேலான்.

      (இ -ள்.) வந்து-, ஓகையோடுஉம் - சந்தோஷத்துடனே, இரு பாதம்
வணங்கி - (தருமபுத்திரனுடைய) இரண்டு தாள்களிலே கும்பிட்டு, வைகும் -
தங்கிய, கந்தோடு அடர் கை கடுங் கோபம் களிறு வேந்தர் -
கட்டுத்தறியையடர்க்கின்ற துதிக்கையையும் கொடிய கோபத்தையுமுடைய
களிற்றுப்படையையுடைய அரசராகி, 'நெடுநாள் அகல் கானில் அடைந்திர் -
வெகுநாள் அகன்ற காட்டிலே தங்கி வசித்தீரே:  அந்தோ - ஐயோ,' என்று-,
நொந்தோரை - மனம் வருந்தினவரை, ஆற்றி - சமாதானப்படுத்தி, அ நுதி
கொள் வேலான் - அந்தக்கூர்மையான வேற்படையையுடைய தருமபுத்திரன்,
நுவல்வான் - (பின்வருமாறு) சொல்பவனானான்; (எ - று.) - தருமன் சொல்
வதை மேலிற்கவியிற் காண்க.                              (322)

23.-'விராடநகரில் ஒருவருஷம்வசித்ததனால்
காட்டில் திரிந்த வருத்தமெல்லாம் நீங்கிற்று' என்று தருமன்
கூறுதல்.

தேனிற்குளித்தசிறையம்புயச்சேக்கையன்னம்
வானிற் பறந்துபுலர்த்தும்புனன்மச்சநாடன்
வேனிற்சிலைவேள்விராடன்புரமேயவன்றே
கானிற்றிரிந்தபரிதாபங்கழிந்ததென்றான்.

      (இ -ள்.) (தருமன்), 'அம்புயம் சேக்கை - தாமரைமலரைப்
படுக்கையாகக்கொண்ட, அன்னம்-, தேனில்-, குளித்த - நனைந்த, சிறை -
(தம்) இறகுகளை,வானில் பறந்து - (ஆகாயத்திலே) பறந்து போய், புலர்த்தும்
- உலர்த்துமாறு(வளம்படைத்த), புனல் - நீரைக் கொண்ட, மச்சநாடன் -
மச்சநாட்டிற்குஉரியவனாகிய, வேனில் சிலை வேள் - வேனிற்காலத்தில்
வில்லையேந்திக்கொண்டு திரிபவனான மன்மதனையொத்த, விராடன் -
விராடராசனுடைய, புரம் - பட்டணத்தை, மேய - வசிக்குமாறு பொருந்திய,
அன்றுஏ - அன்றைய தினமே, கானில் திரிந்த - காட்டிலே
(பன்னிரண்டியாண்டுகள்) திரிந்ததனாலான, பரிதாபம் - துன்பம், கழிந்தது -
நீங்கிற்று, என்றான்-; (எ - று.)                                (323)