பக்கம் எண் :

225

விராடபருவத்தின்
அபிதான சூசிகை யகராதி.


அசுவத்தாமன் -துரோணன்குமாரன், நிரை- 82, 89, 95

அபிமன்
-கிருஷ்ணன் தங்கைபுதல்வன், வெளி - 17: காமன்றிரு
         மைத்துனன், 28

அருச்சுனன்
-சுரபதிமகன், நாடு-3: உருப்பசிசாபத்தாற்
  பேடிவடிவந்தரித்தான், ஆண்மைக்கு இமையவரெவரினும் பெரியோன், 17:
 அம்பிகாபதியால் தவத்தால் பலசுடுகணைபெற்றவன்:  அமரரை
  அவுணருக்காக வென்றவன்: பொற்றரு மலர்வேய்ந்தவன், நிரை - 50:
 கொடியின்மீது அனும னெழப்பெற்றவன்: 58: சுவேதப்பரிமா இவனுக்கு; 65,
  80, 101: துரோணனையாசிரியனாகப் பெற்றவன், 88: குருவைத் தப்பாக்
  குருகுலக்கோ, 91: கவுரி பங்காளனைக்கண்ணுறக் கண்டவன், 99:
  கனற்கடவுடந்த தேரோன், 101: திங்களமுதுகமவுலியிற் சிவனைப் புடைத்த
  வில்லான், 102: விசயனென்ற பெயர் -மிக்கசெயத்தை யுடையவ னென்றும்,
  தன்னை வெல்பவரை யில்லாதவ னென்றும் பொருள்படும்: இது,அசுச்சுனன்
  பெயர்களில் ஒன்று, நாடு - 22, நிரை - 45: கிரீடியென்று, ஒருபெயர்: நிரை-
  43:நரநாமன், 60: இவன் வேறு நாமங்கள் - தனஞ்சயன், பற்குனன்,நிரை-
  85: தன்னை நிகர்கிற்பவரில்லாத் தனுவல்லோன், வெளிப்-4.
  உத்தரன் -விராடன் குமாரன்,நிரை-25: சுதேட்டிணை புதல்வன்
 33: இராகவன் றிருக்குலத்திளைஞன்,35

உத்தரை - விராடன்புத்திரி, நாடு- 20, நிரை - 102.

உதிட்டிரன்
-யுதிஷ்டிரன்:  இது,தருமன் பெயர்: நாடு - 12, நிரை -
 87: மற்றைவிவரங்களைத் தருமனைப்பார்க்க.

உபலாவி
-உபப்லாவ்யம்; விராடன்பாண்டவர் பொருட்டுக்கொடுத்ததும்
  அவனூருக்கு அருகே இருப்பதுமான நகரம் வெளிப்-30

க்ருஷ்ணன்,
வெளிப்- 17

கங்கன்
- அஞ்ஞாதவாசகாலத்தில் தாபத வடிவு கொண்டபோது தருமன்
  புனைந்துகொண்ட பெயர், நாடு-11, நிரை-129

கர்ணன்
-இரவிமைந்தன், நிரை - 7, 82: சூரன்மாமகன்: சூரனிற்சூரன் - 53:
  கற்பகநிகர் கொடையான்,7: அங்கர்கோன்-80

காளி
-விராடநகரத்திலுறைபவள், எழுவகைத்தாயரி லொருத்தி, சாமள
  வடிவினள், சங்கு தண்டுகையிற்றரிப்பாள்,யாமளமறையால்யாவராலும்
  பணியப்படுபவள்: முத்தலை வடிவேலுடையாள்: நாடு - 9,10

கிருபன்
, நிரை -86, 97

கீசகர்
-நூற்றொருநால்வர்:  சுதேட்டிணை துணைவர், கீசக-1: 102

கீசகன்
- விராடன்சேனைத்தலைவன், உபகீசகர் நூற்றுமூவர்க்கு
 அண்ணன், மிக்க அழகியான்: கீசக-1: சுதேட்டிணை தம்பி,2: அறம்பாவ
 மென்றெண்ணலான், 11: குருட்டியல்மதியினான், 60: மண்ணுடைக்காவலன்
  மைத்துனன், 72:சண்டவேகக்களிறன்ன தன்மையான்,90:
  பழுதுடைப்பெரும்பாதகன், 95.