சகுனி - சூதாடிப்பாண்டவர்காட்டிற்செல்லக் காரணமானவன், நாடு-32: சுபலன் புதல்வன், கீசக-50
சயத்திரதன் -சிந்துராசன், நிரை98
சல்லியன், வெளிப்- 25, 27
சாதேவன் -சகதேவன்: நகுலன்தம்பி, நாடு-27: ஆயுண்மறை வானவர் மகன், வெளிப்-3
சிவேதன்,வெளிப்-17, 19: விராடன் புதல்வன், 20
சுதேட்டிணை -சுதேஷ்ணா: விராடன் மனைவி, நாடு-35: கீசகர் இவள் துணைவர், கீசக-1: நரைத்தவோதியள்,நிரை-29
சுயோதனன் -அரவவெங் கொடியோன், நாடு-2: மந்தாகினீமைந்தன் மகன்மைந்தன், நிரை-5:தக்கோர்தகுஞ்சொற்கேளாதவன், 8: மண்கொளாவிறல்மன், 35: நந்தியா வட்ட நாண்மலர்மாலை சூடினோன், 47: இவனுக்குஇராசராசனென்று ஒருபெயர், 69: கங்கைநீர்நாடன், 106
தந்திரிபாலன் -அஜ்ஞாதவாசஞ் செய்ய விராடனிடம் பசுமேய்ப்பவர் தலைவனாய்ச் சகதேவன்அமர்ந்தபோது பூண்டபெயர், நாடு -27
தருமன் - அறக்கடவுளளித்ததோன்றல், நாடு-3:அருளுக்கிருப்பிடமான சிந்தையான்,5: பாண்டவர் தலைவன்: தராதலமுழுதுமுடைய கோமகன், 8: யுதிட்டிரன் என்பது இவனியற்பெயர்,வேள்வி கேள்வியில் மிக்கான், 12: காலமுந் தேசமுமுணர்வான், கீசக-51: பொறையுள்ளான், 134
தாமக்கிரந்தி - நகுலன் அஜ்ஞாதவாசகாலத்தில் குதிரைகட்கு அதிபதியாய் விராடனிடம்அமர்ந்தபோது பூண்ட பெயர், நாடு- 26.
திரௌபதி - துருபதனளித்தவள்,நாடு -2: வன்னியிற்பிறந்த மாமயில்,7: மகவாரழலினூடு யிர்த்தவள், 29: ஐவர்தேவி, விரதசாரிணியென்று பெயர் பூண்டுவிராடநகரில் அரண்மனை யந்தப்புரத்து வண்ண மகளா யிருந்தாள், கீசக-2: அழிவில்கற்பினாள், 21
துருபதன் -திரௌபதியின் தந்தை, நாடு - 2: பாஞ்சாலன், நிரை-139
துரோணன், நிரை-47: மறைத்துவசன், 75. முழுதுணர் முனி - 85: அருச்சுனனாதியரைப் பயிற்றிய ஆசிரியன், 88:93: அதிரதரில் நிகரற்றவன், 92
நகுலன் - நாடு -21: விசயற்கிளையோன், 22: மாவலான், நிரை - 20: ஆயுண்மறைவானவர் மகன், வெளிப்-3
நாளாயணி -திரௌபதியின் முன்னையபிறவிப்பெயர், கீசக-64
பலாயனன் - வீமன்விராடராசனிடஞ் சமையற்காரனா யமர்கையிற் பூண்ட பெயர், நாடு - 15, மற்-8
பாண்டவர் - ஐவர்:அறிவும்ஒடுங்கிய புலன்களுமுடையோர், நாடு - 2: மதிமரபோர், 37:குருவமிசத்தவர், 38:குந்தியின்புதல்வர், கீசக-47
பிருகந்நளை,நிரை-121, 138:அஜ்ஞாதவாசகாலத்திலே அருச்சுனன் பேடிவடிவுகொண்டு உத்தரையைப்பயிற்றுவிக்கையிற் கொண்ட பெயர், நாடு - 19
மச்சநாடு -விராடர்கோனுடையது, நாடு-4: பல்குலமாக்கள் வாழ்வுகூர்வது, 7
விதுரன், நிரை-52,98
|
|
|
|