விரதசாரிணி -அஜ்ஞாதவாசஞ்செய்கையில் விராடன் மனைவியிடம் திரௌபதி வண்ணமகளாயிருந்தபோது பூண்ட பெயர், நாடு - 32, கீசக - 2
விராடன் -மச்சநாட்டரசன், நாடு - 4; வீரரில்வீரன், மற்-8: வீரியன் றனக்கொருவன், நிரை-18:சூரிய வமிசத்தான், கீசக-45: அக்குரோணி தானையுளான், நிரை-10: இவனுக்கு அடையாளப்பூமாலைசெங்கழுநீர், 13: திரிகர்த்தராசனால் தேரிற் பிணிக்கப்பட்டவன், 15: அயோத் திமன்,22
வீடுமன் -மந்தாகினீமைந்தன்,நிரை-5, 52: பாண்டவர்க்கு முந்தை - 85, 98, 105: நெஞ்சினிலழுக்கிலாதான்-106
வீமன் -பவனகுமாரன், நாடு-18,மற்-12: தண்டுபுயவலியிற்சிறந்தோன், நாடு-14: சமையலிலும் மற்போரிலும்வல்லவன், 15: உம்பராரமுத முண்டவுரவினான், மற்-9: கதையுடைக்காளை: 10: இடிம்பனைக் கொன்றவன், 12: திகத்தபூபனினின்றுவிராடனை விடுவித்தான், நிரை-19: துரியோதனனைக் கொல்வதாகச்சபதஞ்செய்துள்ளான், 72, 73: அனேகமாயிரம்யானையின் மிடலுடையான், கீசக-84: கதைவலான், 96. |
|
|
|