விராடபருவத்தின் அரும்பதவகராதி முதலியன. அக்குரோணி,நிரை-8 அசனி-இடி,மற்-5 அசுவத்தாமன்கர்ணனை யேசுதல், நிரை-83,84 அசைவு -வருத்தம், நிரை - 110 அடல் -வலிமை, நாடு-1 அடவி -காடு, நிரை-87 அடித்தல் -கவர்தல், நிரை-8 அடித்தலம்பிடரடித்திட வோடல், நிரை -41 அடுதொழில்- இரட்டுற மொழிதல், கீசக-63 அடை-இலை,கீசக-24 அணங்கு-தெய்வப்பெண், கீசக-65 அணிவிரல்-பவித்திரவிரல், நிரை-92 அத்தம்,மற்-10 அத்தர் -சுவாமி, நிரை-102 அதிரதர்,நிரை-92 அந்தப்புரம், கீசக-2 அம்பரத்தவர், கீசக-2 அம்புயச்சீறடி, கீசக-8 அமளி-படுக்கை, கீசக-24 அரங்கு-நடனசாலை, நாடு-17 அரம்-ஓர்படைக்கலம், நிரை-31 அரமங்கை,கீசக-4 அரவம்-பாம்பு, நாடு-2 அரா-பாம்பு,கீசக-4 அரிடம்=அரிஷ்டம், நிரை-44 அரிபடுகவசம்-தொளைக்கப்பட்ட கவசம்,நிரை-103 அருக்கன்,கீசக-21 அருக்கனுருக்கருகும் அருணவுரு, வெளி-2 அருச்சுனன்குருவைப் புகழ்ந்த உரை,நிரை-88 அருச்சுனன்தேரின்மீது இருத்தல் x கிரியின்மீது மரதகக் கிரிகிளர்த்தல், நிரை-59 அருணன் -சூரியன் தேர்ப்பாகன், நிரை-65 அருத்தி -விருப்பம், கீசக-51 அருந்ததி,கற்பிற்கு எடுத்துக் காட்டாகச் சிறந்தவள்: கீசக-15 அருந்தி-உண்டு, நாடு-2 அல்-இரவு,மற்-1 அலங்கல்-மாலை, நிரை-34 அவண்,நாடு-4 அழலனையகற்பு, கீசக-53 அளை-சேறு,நிரை-73 அளைதல்-துளைதல், கீசக-16 அறல்-நீர்,நாடு-1 அறன்காளையுறைநாட்டுக்கு அடையாளம், நிரை-5 அறுசுவை,நாடு-15 அறுவகைப்படை, வெளிப்-14 அன்புகூர்தல்- காதல்மிகுதல், கீசக 42 ஆகுலம்-துன்பம், கீசக-15, 47 ஆதபன்-சூரியன், கீசக-20 ஆதரம்-காதல், காமவிடாய், கீசக-8,13 ஆதித்தியர்பன்னிருவர், கீசக-45 ஆயு-வயசு,நாடு-23 ஆர்வம்-ஆசை, காதல், கீசக-42, 66 ஆரம் -சந்தனம், முத்தமாலை, நிரை-29 இங்கிதம்- கவனம், கீசக-64 இடியேறுறுநாகம் x கேகயச்சாயலாள் கிளந்த வாசகங்கேட்ட சுதேட்டிணை, கீசக-11 இந்தனம் -விறகு, கீசக-35 இந்துநுதல்,நாடு-34 இமிர்தல் -ஒலித்தல், நாடு-24 இயல் -சாகித்தியம், நாடு - 19 இரதம் -இனிமை, கீசக-10 இரவிகண்டமதி x வீடுமன் சொற்கேட்ட துரியோதனன், நிரை-107 இரவியெதிர்திமிரம் x அருச்சுனன் முன் பகைவர், நிரை - 138. இரவியேகத்திங்கள் அரசுசெய்தல் x பாண்டவர் கானேகத் |
|
|
|