பக்கம் எண் :

அரும்பதவகராதி முதலியன 229

  துரியோதனாதியர் அரசுபுரிதல்: நிரை-73
இருகைசென்னிமேலிருத்தல் தன்னிடத்து ஒதுங்கிவாழலாமென்பது
 குறிப்பிக்கும், நாடு-16
இருள்வலி-சூரியன், கீசக-105
இலக்கு,நிரை-99
இவுளி-குதிரை, நிரை-80
இன்னல்-துன்பம், கீசக-44
இனைவு-வருத்தம், கீசக-40
ஈடு-வலிமை,நிரை-96
ஈமவல்லெரி,கீசக-24
ஈன்றபொழுதின் சான்றோனெனக் கேட்டதாய் பெரிதுவக்கும்,
  நிரை -135
உகைத்து-எழும்பி, நிரை-41
உகைதருதல்-மேலெழுதல், நிரை-61
உச்சமாதல்,நிரை-97
உடன்று-சினந்து, நிரை-78
உண்டி-உணவு,நாடு-14
உண்மை-பிரதியட்சம், நிரை-61
உணங்குதல்-வாடுதல், கீசக-65
உத்தரம்-விடை, கீசக-6: வடக்கு, நிரை-34
உத்தரித்தல் - எதிர்நிற்றல், நிரை-136
உததிதோய்கைமுனி, மற்-1
உதயம்-சூரியனாதியர் உதிக்கும் மலை,மற்-10
உதவியொன்றுசெய்யினும் பல்பிழை பொறுப்பர் பெரியோர், வெளிப்-6
உயிர்த்தல்-வெளிப்படுதல், நாடு-29
உயிரினையெடுப்பதென்று, கீசக-69
உரககேது,நிரை-119
உரகர்-நாகர், நிரை-62
உரம்-மார்பு, வலிமை, மற்-6
உரவு,நிரை-66
உருப்பசி,நாடு-17
உரும் - இடி,மற் - 10: நிரை-10
உளவுகோல்-குதிரையைத்தூண்டுங்கோல்,   நிரை-65
உன்னயம்-அசுவசாஸ்திரங்களி
லொன்று, நாடு-21 (13-ஆம்
போர்ச்சருக்கத்து 105-ஆங் கவியுரையிலுங் காண்க.)
ஊதை-காற்று,மற்-12, நிரை-17
ஊரு-தொடை,மற்-12
எட்டுத்தந்தி, மற்-2
எண்ணியகருமம் யாவரும் எய்தார், கீசக-83
எரி-அக்கினி, நாடு-36
எரிப்புறத்தரு - வன்னிமரம், நிரை-43
எல்லை,கீசக-62
எலுவை,தோழி, நாடு-33
எழில்-அழகு,கீசக-4
எழுவகைத்தாயர், நாடு-9
எற்றி-மோதி, மற்-11
என்று-சூரியன், கீசக-23
ஏசு-குற்றம்,நாடு-33
ஏழுயர்மாடமூதூர், நிரை-118
ஏழெழுபிறப்பு, நாடு-13
ஐந்துவகைக்கதி, நாடு-15
ஐம்பெருஞ்சுற்றம், நாடு-16
ஐயெனல்அங்கீகாரக் குறிப்பு, கீசக-52
ஒப்பனை-அலங்காரம், நிரை-31
ஒருகுத்துஓருருமு, கீசக-75
ஒருவுதல்-நீங்குதல், நிரை-80
ஒளிநிறங்களின் வேறுபாடு, நாடு-23
ஒற்றாள்,நிரை-3
ஒற்றையிருசங்கம், நிரை-5
ஓங்கல்-மலை, மற்-10
ஓதை-ஓசை,நிரை-17
ஓவியம்,கீசக-6
க்ருஷ்ணனதுபாதபங்கயமலர் கமழுமிடம், நாடு-1
கச்சை-கக்ஷ்யா: அரையாடை மீது கட்டுவது:(கச்சுஎன்றதன்
 இரண்டாம்வேற்றுமையுமாம்.) மற்-9
கஞ்சமாலைஅந்தணர்க்கு உரியது, நிரை-93
கடி-நறுமணம்,நாடு-7
கடுமை-விரைவு, கீசக-34