பக்கம் எண் :

236அரும்பதவகராதி முதலியன

வழிபடுதெய்வம், கீசக-70
வளை-சங்கு,நிரை-11
வற்றியவோடையன்ன வனப்பினாள், நிரை-126
வன்பு-வலிமை,மற்-11
வன்னி-அக்கினி, நாடு-7: ஒரு மரம், 9.
வனப்பு-அழகு,நாடு-33
வாசவன் -இந்திரன், நாடு-33:மேம்பட்டவன், மற்-1
வாசி-குதிரை,நாடு-23
வாஞ்சா-விருப்பம், வெளிப்-21
வாணுதல்,நாடு-30
வாய்மை-உண்மைச்சொல், நாடு-13
வார்-நீர்,நிரை-3: கச்சு, நிரை-70
வான்-மேன்மை,நாடு-22
விடந்திகழ்விழியினாள், கீசக-29
விடலை-இளங்குமரன், நிரை-32
விடவி-மரம்,கீசக-34
விடைத்தனன்,கீசக-79
வித்தகன் =விதக்தன்: வல்லவன், நாடு-20
வித்தரம்-விஸ்தாரம், பரப்பு, நிரை-31
விதி,வெளிப்-1
விதியை யாவர்விலக்கவல்லார்கள், கீசக-46
விம்பம்-வட்டம், மற்-9
விரகதாபங்கொண்டாரின் படுக்கைத்தன்மை, கீசக-24
விரகு-உபாயம்,தந்திரம், நாடு-27
விரதம்-வரதம், விரஸம், ஒழிவு, நாடு-32
விரதர்,கீசக-107
விரவுதல்-சேர்தல், நாடு-8
விராடமன்னன்x மலரோடை, நிரை-9
விரை-வாசனை,நிரை-9
விழவு-விவாகம், 30
விளக்கி-தேற்றி, நிரை-40
விளைவு-விளைச்சல், பயன்: நாடு-4, 13
வினயம்-வணக்கம், நிரை-7
வீ-மலர்,நிரை-129
வீட்டிலுறைஉத்தரகுமரன் x  கூட்டிலுறைகலுழன்குஞ்சு, நிரை-27
வீமன்திரிகர்த்தன் தேரினைவேறொருதேரால் தகர்த்தல்x 
  வாயுதேவன்நகத்தினை நகத்தினால்நறுக்குதல், நிரை-17
வீரியம்-வலிமை, கீசக-36
வெட்சித்தாமம் நிரைகவரச்செல் வாரணிவது,நிரை-8
வெண்டிரைx  சேனை, நிரை-61
வெந்தநெய்அரவமடங்க அதில் பால்துளிபெய்ய ஆரவாரித்தல்
 x ஆன்களை அடித்துக்கொண்டு போனவர் அடங்க,மீட்டவர்
 ஆரவாரித்தல், நிரை-56
வெரீஇயினள்-அஞ்சினாள், நாடு-35
வெரு-அச்சம்:நிரை-19
வெளிநின்றமாற்றம், வெளிப்-17
வேகவற்றியநதிx
மந்தநடைப்புரவி: நிரை-68
வேணலம்,கீசக-76
வேத்தவை-வேந்துஅவை: ராஜசபை,நாடு-26
வேதியர்,நாடு-4
வேலை-கடல்,நாடு-20
வேள்-மன்மதன், நாடு-21
****