பக்கம் எண் :

26பாரதம்விராட பருவம்

பார்வையையுடைய திரௌபதியும், மதி மரபோர் ஐயவர்உம் - சந்திர
குலத்தவரான பாண்டவரைவரும், மறைந்தனர்கள் ஆய்-, உறையும் -
வசித்துவந்த, நாளில் - அக்காலத்திலே,-மெய் வரு - உண்மையே வருகின்ற,
வழா - (ஒருபோதும்) தவறாத, மொழி - பேச்சையுடைய, விராடபதி திருநாடு-
விராடராசனுடைய சிறந்த மச்சநாடானது, உய்வு அரு - நீங்குதலில்லாத, பெருந்
திருவொடு - மிக்கசெல்வத்தோடு, ஓங்கியது - மேன்மையுற்றிருந்தது; (எ - று.)

     உத்தமோத்தமரான பாண்டவர் வசித்தலால், அந்நாடு எந்நாட்டினும்
மேம்பட்டிருந்த தென்பதாம்.  மறைந்தனர்களாயுறைதல் - அஜ்ஞாதவாசஞ்
செய்தல்.  அன்றே - ஈற்றசை.  ஓங்கியதை என்பதில், ஐ - சாரியை. (37)

38.-இதுவும் அது.

குருக்களவனூரினிடைகுருநிலனொடொப்புற்று
இருக்கும்வழிமாமழையுமெவ்விளைவும்விஞ்சித்
தருக்கினுடன்யானைமுதறானைகளும்விஞ்சிச்
செருக்குமுடன்விஞ்சியதுசெப்பவரிதம்மா
.

     (இ -ள்.) குருக்கள் - குருவமிசத்தவரான பாண்டவர்கள், அவன் ஊரி
னிடை -அந்தவிராடனுடைய நகரத்திலே, குருநிலனொடு ஒப்பு உற்று - குரு
நிலத்தில் வசிப்பதுபோன்று [தமக்குஉரியஊரில் வாழ்வதுபோன்று], இருக்கும்
வழி-(இனிது) வசிக்கும்போது,-மாமழைஉம்-மிக்க மழையும், எ விளைவுஉம் -
எப்படிப்பட்ட [பலவகையான] விளைவும், விஞ்சி - மிகுந்து,-யானை முதல்
தானைகள்உம் தருக்கினுடன் விஞ்சி - [நாட்டின்செழிப்பினால் நன்கு
போற்றப்படுவதனால்) யானைமுதலிய சேனைகளும் தருக்கு மிக்கு,
(ஊர்முழுவதும்), செருக்குஉம் - வளமும், உடன் விஞ்சியது - ஒருசேர
[எங்கும்] மிக்கிருந்தது: (அதனால் அந்தஊரின் தன்மை), செப்ப அரிது -
(இன்னபடியிருந்ததென்று) சொல்லுதற்கு முடியாது; (எ - று.)

 

      அம்மா- வியப்பிடைச்சொல்: பாண்டவர்கள் அஜ்ஞாதவாசஞ்
செய்வதனால், அவ்வூர் வாய்கொண்டு சொல்ல முடியாதபடி அவ்வளவு
செழிப்பு விஞ்சியது குறித்து வியந்தவாறு.                       (38)

நாடுகரந்துறைசருக்கம் முற்றிற்று.
------