யோடு உண்டுஒரு வருத்தமு மின்றிப் பன்னிரண்டு வருஷங்களை, ஒருநாளைக் கழிப்பதுபோலத் திரௌபதியுடனே எளிதிற்கழித்தன ரென்பதாம். காட்டில் வசித்தபோது இருடியர் கணமும் இவருடனுறைவதாயிற்றென்க. (2) 3.-அஜ்ஞாதவாசத்தைஎங்குச்செய்யலா மென்று தருமன்வினாவ, அருச்சுனன்கூறலுறுதல். தொல்லறக்கடவுளருளுடனளித்ததோன்றறன்துணைவரைநோக்கிக் கல்லமர்கிரியுங்கானமுமிடமாக்கழித்தனமொழிந்தனகாலம் எல்லையோராண்டுமியாவருமுணராதிருப்பதற்காமிடம்யாதோ சொல்லுமினென்றானென்றலுந்தொழுதுசுரபதிமகனிவைசொல்வான். |
(இ -ள்.) தொல் அறம் கடவுள் அருளுடன் அளித்த தோன்றல்-பழமை யான தருமத்திற்கு உரிய கடவுளாகிய யமன் அருளோடு உண்டாக்கிய குமாரனாகிய யுதிட்டிரன், தன் துணைவரை நோக்கி - தன் தம்பிமாரைப்பார்த்து,-'கல் அமர் கிரிஉம் கானம்உம் இடம் ஆ கழித்தனம்- கற்கள் பொருந்திய மலைகளையும் காட்டையும் இடமாகக்கொண்டு காலங்கழித்தோம்: காலம்-(காட்டிற்கழிக்கவேண்டிய) காலவெல்லையான பன்னிரண்டியாண்டுகளும், ஒழிந்தன - கழிந்திட்டன; எல்லை (-இனிக் கழிக்கவேண்டிய) காலவெல்லையான,ஓர் ஆண்டு உம்-ஒரு வருஷகாலமும், யாவர்உம் உணராது இருப்பதற்கு - எவராலும் அறியப்படாமல் வாசஞ்செய்வதற்கு, ஆம்-ஏற்றதான, இடம்-, யாதுஓ - எதுவோ? சொல்லுமின் - (நீங்கள்) சொல்லுங்கள்,' என்றான்-; என்றலும் - என்று (யுதிட்டிரன்) வினாவியவுடனே, தொழுது - வணங்கி, சுரபதி மகன் - தேவேந்திரனருளாற்பிறந்த குமாரனாகிய அருச்சுனன், இவை சொல்வான் - இவ்வார்த்தைகளைச் சொல்பவனானான்; (எ - று.)-அருச்சுனன் கூறுவதை மேலிரண்டு கவிகளிற்காண்க. 'யாவருமுணராதிருப்பதற்காமிடம்' என்றதனால், அஜ்ஞாத வாசத்திற்கு ஏற்ற இடம் என்றவாறாயிற்று. தேவர்கட்கெல்லாம் தலைவனான இந்திரனுடைய அருளாற் குந்தீதேவியினிடம் தோன்றியவ னாதலால், அருச்சுனன் 'சுரபதிமகன்' எனப்பட்டான். 'தோன்றல் தன் துணைவரை நோக்கி' என்றமையால், அஜ்ஞாதவாசஞ் செய்வதற்காகத் தருமன் ஆலோசனைபுரிந்தது துணைவரைத்தவிர வேறு எவர்க்கும் தெரியாமலே யென்பது பெறப்படும்: முதனூலில், 'பன்னிரண்டு வருஷம் வனவாசஞ்செய்து கழித்தோம்: இனி, ஓரியாண்டு ஒருவருக்கும் தெரியாது கழிக்கவேண்டுமாதலால், நும்மிடத்து விடைபெற்றுக் கொள்ளுகிறோம்' என்று யுதிஷ்டிரன் உடனிருந்தமுனிவர் முதலியோரிடத்து விடைபெற்றுக்கொண்டு, தாம் வசித்திருந்த ஆச்சிரமத்துக்குக் குரோசதூரம் அப்பாற்சென்று தம்பிமாருடனும் திரௌபதியுடனும் தௌமிய முனிவருடனும் இருந்து ஆலோசித்தனனென்று உள்ளது. (3) |