பக்கம் எண் :

மற்போர்ச் சருக்கம் 31

வலப்புறமாகவும் இடப்புறமாகவும் சஞ்சரித்தல்.  ஒத்தியும் - ஒற்றியும்
என்றலுமாம்.                                             (44)

7.ஒரொருமல்லராகவொருதனிமல்லன்றன்னோடு
ஆரமருடற்றிமல்லரனைவருமழிந்தபின்னர்
வீரரில்வீரனானவென்றிவேல்விராடன்மெச்சித்
தேரின்மேல்வந்தமல்லன்றனக்கெலாச்சிறப்புஞ்செய்தான்.

      (இ -ள்.) ஒரு தனி மல்லன் தன்னோடு - ஒப்பற்ற தனித்த மல்லனான
(வந்த அந்த) வீரனோடு, ஓர் ஒரு மல்லர் ஆக - ஒவ்வொரு மல்லவீரராக,
ஆர் அமர் - அருமையான மற்போரை, உடற்றி - பொருது, (இங்ஙனம்),
மல்லர் அனைவர்உம் - எல்லாமல்லர்களும், அழிந்த பின்னர் - தோற்ற
பிறகு,-வீரரில் வீரன் ஆன வென்றிவேல் விராடன் - வீரர்கட்குட் சிறந்த
வீரனென்று மதிப்புப்பெற்ற வெற்றிபொருந்திய வேற்படையையுடைய
விராடராசன், மெச்சி - (வந்த மல்லவீரனைப்) பாராட்டி, தேரின் மேல் வந்த
மல்லன் தனக்கு - தேரின்மேல்வந்த (அந்த) மல்லனுக்கு, எலாம் சிறப்புஉம் -
எல்லாச்சிறப்புகளையும், செய்தான்-; (எ - று.)

     வீரத்தின்சிறப்புப் பெருவீரனானவிராடனுக்குத் தெரியு மாதலால்,
வந்தமல்லனை மெச்சி பெருமல்லற்குச் செய்யவேண்டிய சிறப்புக்களை அந்த
மல்லனுக்கு விராடமன்னவன் செய்தா னென்க.

8.-மற்றைநாள்தருமபுத்திரன், மன்னனிடம்
'இந்தமல்லனைப் பலாயனன்வெலத்தக்கான்'என்ன,
அரசன்அவனையழைப்பித்தல்.

அன்றுபோய்மற்றைநாளினரசனோடறத்தின்மைந்தன்
வென்றமாமல்லன்றன்னைவெல்லுதற்குரியமல்லன்
இன்றுநின்மடையர்தம்மிற்பலாயனனென்போன்றன்னை
அன்றிவேறில்லையென்றானரசனுமழைமினென்றான்.

      (இ -ள்.) அன்று போய்-, மற்றைநாளின் - மற்றைநாளிலே,-அரசனோடு
- விராடராசனுடனே, அறத்தின்மைந்தன் - தருமபுத்திரன், 'வென்ற-(நேற்று)
வெற்றிபெற்ற, மா மல்லன் தன்னை - சிறந்த மல்லவீரனை, வெல்லுதற்கு உரிய
- ஜயிப்பதற்கு ஏற்ற, மல்லன் - மற்போர்செய்பவன், இன்று - இப்போது, நின்
மடையர் தம்மில் - உன்னுடைய சமையற்காரர்க்குள், பலாயனன் என்போன்
தன்னை அன்றி - பலாயனனென்பவனை யல்லாமல், வேறு - வேறொருத்தர்,
இல்லை-,' என்றான்-; அரசன்உம் - விராடராசனும், 'அழைமின் - (அந்தப்
பலாயனனை) அழைத்துவாருங்கள்,' என்றான் - என்று கூறினான்; (எ - று.)

     பலமல்லர்களும் அந்தமஹாமல்லனைக் கண்டு அஞ்சினார்களாகச் சிலர்
எதிர்த்துத் தோற்றார்கள்: அந்தமஹாமல்லன் அப்போது விராடனைப் பார்த்து
'நான் மல்லராஜன்: என்னோடு பொரத்தக்கார் எவருமில்லை: சிங்கம் புலி
முதலியவற்றுடனும் பொரவல்