பக்கம் எண் :

34பாரதம்விராட பருவம்

கண்கள்கண்டு களிக்குமாறு தோற்றுவித்து, உற்றனர் - நெருங்கினவராய்,
நின்ற போதில் - (அவ்விரண்டுமல்லரும்) நின்ற சமயத்தில்,-இடிம்பன் தன்னை
செற்ற வெம் கொற்றம் தோளான் - இடிம்பாசுரனை யழித்த கொடிய வெற்றி
தங்கிய தோள்களையுடையவனான, ஊதையின் புதல்வன் - காற்றின்
குமாரனாகிய வீமசேனன், ஊரு - (தன்னுடைய) தொடை, மற்றவன் மருங்க
பற்ற - மற்றொருவனான மல்லனுடைய இடுப்பைச் சுற்றியவண்ணம் பற்றிநிற்க,
வல் கரம் - வலிய கையானது, மிடறு பற்ற - (அவன்) கழுத்தைப் பற்றிநிற்க,
செற்றனன் - (வந்த) மல்லனை யழித்திட்டான்; (எ - று.)

     இடிம்பனைச்செற்ற சரிதையை ஆதிபருவத்து வேத்திரகீயச் சருக்கத்துக்
காண்க.  காயம் - ஆங்கிலத்தில் ' Feat' எனப்படும்.                 (50)

13.-வந்த மல்லனைவென்றுநின்ற வீமனை
மன்னன் பாராட்டுதல்.

தேர்மிசைவந்தமல்லன்சிதைந்தபேருறுப்பினோடும்
பார்மிசைக்கிடக்கநின்றுபணைப்புயங்கொட்டியார்த்தான்
சீர்மிகுமல்லன்றன்னைச்சிறப்புறத்தழுவியெல்லாப்
போர்முகங்களுக்குநின்னைப்போல்பவரில்லையென்றான்.

      (இ -ள்.) தேர் மிசை வந்த-, மல்லன்-, சிதைந்த - அழிந்திட்ட, பேர்
உறுப்பினோடுஉம் - (தன்னுடைய)பெரிய உறுப்புக்களுடனே, பார்மிசை கிடக்க-
பூமியின்மீது விழுந்துகிடக்க,-நின்று-(வெற்றிபெற்று) நின்று கொண்டு, பணை
புயம் கொட்டி ஆர்த்தான்-(தன்னுடைய) பருத்த தோள்களைக்கொட்டி
யாரவாரஞ்செய்பவனான, சீர் மிகு மல்லன் தன்னை - சிறப்புப்பொருந்திய
மல்லனான பலாயனனென்றுபேர்பூண்ட வீமசேனனை, சிறப்புஉற - சிறப்புப்
பொருந்த, தழுவி-கட்டிக் கொண்டு, 'எல்லாம் போர்முகங்களுக்குஉம் -
முனைமுகங்களிலெல்லாம், நின்னை போல்பவர் - (உன்னை) ஒத்திருப்பவர்,
இல்லை-,'என்றான்- என்று (விராடமன்னவன்) பாராட்டிக் கூறினான்; (எ - று.)

      தன்மல்லன் வெற்றி பெற்றது கண்ட மகிழ்ச்சியினால் தன் தேசத்துக்கே
ஒருமேம்பாட்டை யுண்டாக்கிய அந்தமல்லனை மன்னன் தழுவினானென்க. (51)

14.-விராடன் பலாயனனுக்குப்பலவரிசைகளளித்து
அவன் திறமையைப்புகழ்ந்துகூறுதல்.

மன்னவர்க்களிக்கத்தக்கவரிசைகளனைத்துநல்கி
முன்னவனாகிவைகுமுனிமனங்களிக்குமாறு
தன்னருகணுகவைத்தித்தலத்தெதிரில்லையிந்த
இன்னமுதடுவோற்கென்றானியற்றிறல்விராடன்றானே,