பக்கம் எண் :

36பாரதம்விராட பருவம்

முடைய,சுதேட்டிணை தன் - சுதேட்டிணை யென்பாளுடைய, திருத்துணைவர்
நூற்றொருநால்வரில் - சிறந்த உடன் பிறந்தவர்கள் நூற்றுநால்வருக் குள்ளே, -
தோற்றம்உம் - (கம்பீரமாகக் காணப்படுங்) காட்சியும், மன்னும் ஆண்மைஉம் -
நிலையாகப்பொருந்திய பராக்கிரமமும், தேசுஉம்-ஒளியும், சிறந்துளான்-
மிக்குள்ளவனும், வரூதினுக்கு தலைவன்-(விராடனுடைய) சேனைக்குத்
தலைவனும், முன்தோன்றிய கன்னல் வேள் அனையான் - (சிவபெருமானால்
உடலெரிந்து போவதற்கு) முன் வடிவத்தோடு காணப்பட்ட
கரும்புவில்லையேந்திய மன்மதனை யொத்தவனும், காண்தகு மேனியான் -
காணத்தக்க [மிக அழகிய ] உடம்பை யுடையவனுமான கீசகன், தன்
துணைவியை - தன்னுடன்பிறந்தவளான சதேஷ்ணையை, காண - பார்ப்பதற்கு,
வந்தனன்-; (எ - று.)-தேசு - புகழுமாம்.

     ஸூதவமிசத்திற்சேர்ந்த கேகயனுக்கு மாளவியென்ற ஒரு பாரியையும்,
அவள் தங்கை மற்றொருபாரியையுமாக இருந்தனர்: மூத்தவளான
மாளவியினிடத்துக் கீசகனும் உபகீசகர் நூற்றைவரும் தோன்றினர்: இவர்கள்
காலேயரென்று பிரசித்தரான அசுரரின் அமிசமானவர்:  இவர்களிற் கீசகன்
பாணனுடைய அமிசமானவன்: மாளவியின் தங்கையினிடத்துப் பிறந்தவள்
சுதேஷ்ணையென்பவள்.  மத்ஸ்யதேசாதிபதியான விராடன்மனைவி சுரதை
யென்பவள் இறந்துவிடவே, அந்த விராடன் இந்தச்சுதேஷ்ணையை
மணந்தனன்: மைத்துனன்மார்களாகிய கீசகர்கள் சிறுதாயின்பெண்ணான
சுதேஷ்ணையோடு மச்சநாட்டை யடைந்தனர்: கீசகன் விராடனிடம்
சேனாபதியாயிருந்து பலநாடுகளையும் அம்மன்னவனுக்கு வென்று தந்தானென்ற
இவ்விவரத்தை முதனூலா லறிக.  முதனூலுக்கு ஏற்ப, நூற்றொருநால்வரில்
என்ற இடத்து நூற்றினினறுவரில் என்றாற் போன்று பாடமிருக்கலாமென்று
தோன்றுகின்றது.

      முதற்பத்தொன்பதுகவிகள் - பெரும்பாலும் முதற்சீரும் ஐந்தாஞ்சீரும்
மாச்சீர்களும், மற்றையவை விளச்சீர்களுமாகி வந்த கழிநெடிலடிநான்குகொண்ட
எண்சீராசிரிய விருத்தங்கள்.                                (53)

2.-தமக்கையைவணங்கிக் கீசகன்மீள்கையில், விரதசாரிணியென்ற  
    திரௌபதிபூக்கொய்துகொண்டுஇவன்முன் முடுகுதல்.

தம்பியப்பெருந்தையலைநூபுரத்தாளின்வீழ்ந்து தகவுடன்மீடலும்,
அம்பரத்தவர்கற்பகக்காநிக ரந்தவந்தப்புரத்தகன்காவினில்,
வெம்புகர்க் களிற்றைவர்தந்தேவியாம் விரதசாரிணி மென்மலர்
                                       கொய்திளங்,
கொம்பொடொத்திடைசோரப்பணைத்தபொற் கொங்கையாளிவன்
                                முன்னர்க் குறுகினாள்.

      (இ -ள்.) தம்பி-சுதேஷ்ணையின் தம்பியான கீசகன், அ
பெருந்தையலை-பெருமையுள்ள அந்தச்சுதேஷ்ணையை, நூபுரம் தாளின்
வீழ்ந்து-நூபுரமணிந்த பாதங்களிலே வணங்கி, தகவுடன்-பெருமை