7. | மாரசாயகத்தாலுயிர்மாளினும் வசையிலாதமரபின்வந்தோர் பிறர், தாரமானவர்தம்முகம்பார்ப்பரோ தக்கவர்க்குத்தகவிவையே கொலாம், சோரனாதலிற்சொற்றாயினித்தவிர் சுரேசரைவர் தங்காவலென்றோளிணை, வீரபோவென்னருகுறிலாவிபோம் விழித்திமைக் குமுனென்றுவிளம்பினாள். |
(இ -ள்.) மார(ன்) சாயகத்தால் - மன்மதபாணத்தினால், உயிர்மாளின்உம்- உயிர் போவதாயிருந்தாலும் [இறப்புநேர்வதானாலும்], வசை இலாத மரபின்வந்தோர் - குற்றமற்ற வமிசத்திற் பிறந்தவர், பிறர் தாரம் ஆனவர் தம் முகம்பார்ப்பர்ஓ - அயலாருடைய மனைவியானவளின் முகத்தைக் கண்ணெடுத்துப்பார்த்தலேனுஞ் செய்வரோ? தக்கவர்க்கு - யோக்கியர்கட்கு, தகவு -நற்குணங்கள், இவை ஏ கொல்-இவ்வாறு பிறர்மனையை விரும்புதல்முதலியனவோ தாம்? சோரன் ஆதலின் - கள்ளத்தன முடையாயாதலால்,சொற்றாய் - (நீ இவ்வாறான வார்த்தைகளைச்) சொன்னாய்: இனி-, தவிர் -(இவ்வாறானபேச்சை) ஒழிவாய்: என் தோள் இணை - என்னுடைய இரண்டுதோள்களும், சுரேசர் ஐவர் தம்-சிறந்ததேவர் ஐவர்களின், காவல் -பாதுகாவலிலுள்ளன; வீர - வீரனே! போ-அப்பாற்போ: என் அருகு உறில் -என்னருகேவந்தாலோ, விழித்து இமைக்கும் முன் - கண்ணை மூடித் திறக்குங்காலவளவைக்குள், ஆவி போம் - உன்னுயிர் ஒழிந்திடும், என்று-,விளம்பினாள்-சொன்னாள்; (எ - று.) ஆம் - அசை.
விழித்திமைக்குமுன் போ என்று இயைத்தலும் ஒன்று. கந்தருவர் காவல்புரி கற்புடையவள் என்று வந்ததற்கு ஏற்ப, சுரேசர் என்பதும் கந்தருவர் என்ற பொருளைத் தருமென்க. (59) 8.-திரௌபதி கடிந்துகூறவும்கீசகன காலில் விழுந்து வேண்ட, அவள்சுதேஷ்ணையிடஞ் சேர்தல். பேதையிப்படிக்கூறவுங்காதனோய்பெருகுசிந்தையன்பின்னையு முன்புறா, ஆதரத்தெனதாருயிர்போகினுமமையுமென்றவளம்புயச்சீறடி, மீதுநெற்றிபடத்தொழுதான்வடிவேற்கணாளும்வெகுண்டுவிரைவினில், தூதுளங்கனிவாய்முத்தவாணகைச்சுதேட்டிணைப்பெயராளுழைத் துன்னினாள். |
(இ -ள்.) பேதை-மடவரலான திரௌபதி, இப்படி கூறஉம் - இவ்வாறு (கீசகன்செயலைக் கண்டித்துச்) செல்லவும், காதல் நோய்பெருகு சிந்தையன்- ஆசைநோய் விஞ்சிய மனத்தையுடையவனாய்,-(கீசகன்),-பின்னைஉம் - பின்னும், முன்பு உறா - (அவளுடைய) முன்னே வந்து, 'ஆதரத்து எனது ஆர்உயிர்போகின்உம் அமையும்-காதல் காரணமாக எனது அருமையான உயிர் இறப்பதானாலும் தகும்,' என்று - என்று சொல்லி, அவள் அம்புயம் சிறு அடிமீது - அந்தத்திரௌபதியின் தாமரைமலர்போன்ற சிறிய பாதங்களின்மேல், |