நெற்றி படதொழுதான் - (தன்) நெற்றிபட வணங்கினான்: வடிவேல்கணாள் உம் - கூரிய வேற்படைபோன்ற கண்களையுடையளான அந்தத் திரௌபதியும், வெகுண்டு - கோபங்கொண்டு,-தூதுளை கனிவாய் முத்தம் வாள் நகை சுதேட்டிணைப் பெயராளுழை - தூதுளம் பழம்போன்ற சிவந்த வாயையும் முத்துப்போன்று ஒளிபொருந்திய பற்களையுமுடையளான சுதேஷ்ணை யென்பாளிடத்தில், விரைவினில் துன்னினாள் - விரைவாகப் போய்ச்சேர்ந்தாள்; (எ - று.)-முன்பு உறா ஆதரத்து என்று என இயைத்து - இதற்கு முன்பில்லாத காதலோடு என்றுகூறி எனினுமாம். (60) 9.-சென்ற திரௌபதிதன்வருத்தம் தோன்றநின்று அவளிடத்து நிகழ்ந்ததுகூறுதல். நடுங்குமெய்யினள்பேதுறுநெஞ்சினணாணுநீர்மையணா வினுணீரிலாது, ஒடுங்குமென்மையடன்மையினாற்புன லுகுத்தககண்ணினளோவியம் போன்றுளாள், கடுங்கண்யானைப்பிடரிருந்திந்நிலங் காக்கும்வெண் குடைக்காவலன்றேவிகேள், தொடுங்கழற்கழலானின்றுணைவனெற்சுட்டியாயிரஞ்சொல்லல சொல்லினான். |
இரண்டு கவிகள் - ஒருதொடர். (இ -ள்.) ஓவியம் போன்றுஉளாள்-சித்திரப்பதுமை போன்றுள்ளவளாகியஅந்தத் திரௌபதி,-நடுங்கும் மெய்யினள்-(அச்சத்தினால்) நடுக்கமடைந்தஉடம்பையுடையவளும், பேதுறு நெஞ்சினள்-கலங்கிய மனத்தை யுடையவளும்,நாணும் நீர்மையள் - நாணுகின்ற தன்மையையுடையவளும், நாவினுள் நீர்இலாது ஒடுங்கும் மென்மையள் - (தனக்கு நேர்ந்திருக்கின்ற அவஸ்தையைஎண்ணித் தன்) நாவினிடத்து நீரூறுதலுமில்லாமல்(வறண்டுபோக) ஒடுங்குதற்குக்காரணமான மென்மைத்தன்மை யுடையவளும், தன்மையினால் - (மெல்லியலான) தன்மைக்குஏற்ப, புனல் உகுத்த கண்ணினள் - நீரைச்சிந்துகின்ற கண்களையுடையவளுமாய்,-கடுங்கண் யானை பிடர் இருந்து இ நிலம் காக்கும் வெள் குடை காவலன் தேவி - கொடிய கண்களையுடைய யானையின் பிடரியிலே யிருந்துகொண்டு இந்தப்பூவுலகைக் காக்குந் தன்மையுள்ள வெண்கொற்றக்குடையையுடைய அரசனுடைய மனைவியே! கேள் - (நிகழ்ந்ததைக்) கேட்பாயாக: தொடும் கழல் கழலான்-அணிந்த வீரக்கழலை யுடைய பாதங்களை யுடையனான, நின் துணைவன் - உன்னுடன் பிறந்தவன், என் சுட்டி - என்னைக் குறித்து, சொல் அல ஆயிரம் சொல்லினான் - சொல்லத்தகாதனவான பலவார்த்தைகளைச் சொன்னான்; (எ - று.) முதலிரண்டடிகள்-அந்தத்திரௌபதிக்கு அச்சத்தினால் தோன்றிய மெய்ப்பாடுகளை விளக்குவன. மூன்றாமடி - நீதிநெறிநடத்தும் மன்னவனுக்கு நீ மனைவி யாதலால், அநீதிநடவாமல்; பார்க்கவேண்டுவது உனக்கும் பொறுப்பே யென்பதைக் குறிப்பிக்கும். (61) |