10.-இனிச்செய்யவேண்டுவது இன்ன தென்றும்,நெறிதவறின் இன்னது விளையுமென்றும் அந்தத்திரௌபதி கூறுதல். விரதசாரிணியென்பதுந்தேவரென் மெய்புரக்கும்விரதமுமிங்குனக்கு, இரதமாகவரமனைக்கெய்துமுனியம்பினேனெனையாவருமிச்சியார், சுரதமாடுமகளிரைத்தேடிநின்றுணைவன்வேட்கையுஞ்சோகமுமாற்றிடு, சரதமாகநினையாதொழிநெறி தப்பிலாருயிர்தப்புமென்றோதினாள். |
(இ - ள்.) விரதசாரிணி என்பதுஉம் - (என்பெயர்) விரதசாரிணி யென்பதையும், தேவர் என் மெய் புரக்கும் விரதம்உம் - தேவர்கள் என்உடலைக் காக்கின்ற கொள்கையையும், இங்கு - இங்குள்ள, உனக்கு-, இரதம் ஆக - இனிமையாக, வரம் மனைக்கு எய்தும் முன் - (உன்னுடைய) சிறந்த வீட்டில் (வண்ணமகளாய்ச்) சேர்தற்குமுன்னம், இயம்பினேன் - சொல்லியுள்ளேனே: (இப்படியிருப்பதனால்தான்), எனை - என்னை, யாவர்உம் - எவரும், இச்சியார் - விரும்பமாட்டார்: (ஆகையால்), சுரதம் ஆடும் மகளிரை - (விலைப்பொருட்டாகப்) புணர்ச்சியை நிகழ்த்துகின்ற வேசியரை, தேடி-, நின் துணைவன் - உன்தம்பியின், வேட்கைஉம் - ஆசையையும், சோகம்உம் - (மன்மதனால் நிகழ்ந்துள்ள) வருத்தத்தையும், மாற்றிடு - மாறச்செய்: சரதம் - ஆக - திண்ணமாக, நினையாது ஒழி - (என்னால் அவனுடைய வேட்கையையும் சோகத்தையும் போக்கலா மென்று) நினையாது தவிர்வாய்: நெறி தப்பில் - முறைமை தவறி (ஏதேனும்) நிகழுமானால், ஆர் உயிர் தப்பும் - (உன் தம்பியின்) அரியஉயிரே அழிந்திடும், என்று -, ஓதினாள் - கூறினாள், (அந்தத் திரௌபதி); (எ - று.) விரதசாரிணி என்பது-நல்லொழுக்கத்துடன் நடப்பவ ளென்று காரணப் பொருள்படும். என்பெயரினாலேயே யான் எப்படிப்பட்ட தன்மையுடையவ ளென்பதை நீ அறிந்திடலாமேயென்பது, குறிப்பு. ஸ ு ரம் - வடசொல். (62) 11.-திரௌபதியின்வாசகங்கேட்டுச்சுதேஷ்ணை அவள்கண்ணீர் துடைத்து 'என்வீடணுகாவகைபோ' என்று தம்பியை முனிதல். கேகயங்களெனுமெழிற்சாயலாள்கிளந்தவாசகங்கேட்டிடியேறுறும், நாகமென்னநடுங்கியப்பூங்கொடிநயனநீர்துடைத்துற்றதுநன்றெனா, வேகமுற்றமனத்தொடுதம்பியை மிகமுனிந்துதனவீடணுகாவகை, ஏகுகென்றனளென்றலுஞ்சோகமோடேகினானறம்பாவமென் றெண்ணலான். |
(இ - ள்.) கேகயங்கள் எனும்-கேகயப்பறவை யென்று சொல்லத்தக்க, எழில்-அழகிய, சாயலாள்-தோற்றத்தை யுடையவளான திரௌபதி, கிளந்த - சொன்ன, வாசகம்-வார்த்தையை, கேட்டு-, (சுதேஷ்ணை),-இடிஏறு உறும் - பேரிடியினோசையைக் கேட்டல் பொருந்திய, நாகம் என்ன - பாம்புபோல, நடுங்கி-, அ பூங் கொடி நயனம் நீர் துடைத்து - அந்தப் பூங்கொடி போன்ற திரௌபதியின் கண்ணீரைத் துடைத்து, 'உற்றது-நேர்ந்த நிகழ்ச்சி, நன்று - நன்றாகவுள்ளது,' எனா - என்றுசொல்லி, வேகம் உற்ற - கோபா |