வேசம் மிகுந்த, மனத்தொடு - மனத்துடனே, தம்பியை - கீசகனை, மிக முனிந்து - மிகவும் கோபித்து, தன் வீடு அணுகா வகை - (இனித்) தன் வீட்டைச்சேராதபடி, 'ஏகுக - போய்விடுவாயாக,' என்றனள் - என்று கூறினாள்: என்றலும் - என்று சொன்னவுடனே, அறம் பாவம் என்று எண்ணலான் - (இந்தச்செயல்) புண்ணியம் (விளைப்பது, இது) பாவம் (தருவது) என்று ஆலோசித்த லில்லாதவனாகிய அந்தக்கீசகன், சோகமோடு - துயரத்தோடு, ஏகினான் - (தன்வீட்டுக்குச்) சென்றான்; (எ - று.) இடியேற்றைக்கேட்ட நாகம் நடுங்குமென்பது, நூற்கொள்கை: 'விரிநிறநாகம் விடருளதேனு, முருமின் கடுஞ்சினஞ் சேணின்று முட்கும்" என்றது, நாலடி. கேகயம் - மயில். அப்பூங்கொடி என்பது சுதேஷ்ணையைச் சுட்டுவதாயின், நயனம் - (திரௌபதியின்) நயனம் என்க. (63) 12.-அற்றைநாளிராத்திரிகீசகன் பட்ட மன்மதாவத்தை.
சென்றுதன்மனைபுக்கபின்மன்மதன்செருவினொந்தழிசிந்தையனாய் மலர்; மன்றன்மெல்லணைவீழும்வெம்பாலையால்வகுத்ததோவிம் மலரணைதானெனும், தென்றறன்னையுந்தீயெனுந்திங்களைத் தினகரன்கொலென்றேங்குஞ் செயலழிந்து, அன்றவன்கருங்கங்குலிற்பட்டபாடவனையல்லதையார்படுவார்களே. |
(இ -ள்.) சென்று-போய், தன் மனை புக்க பின் - தன் வீட்டினுள்ளே சேர்ந்தபிறகு, மன்மதன் செருவில் - மன்மதன் செய்யும் போரிலே, நொந்து - வருந்தி, அழி - அழிந்த, சிந்தையன் ஆய் - மனத்தையுடையவனாய்,-மலர் மன்றல் மெல் அணை வீழும் - மலர்கொண்டு பரப்பிய நறுமணமுள்ள மெல்லிய படுக்கையிலே விழுவான்: 'இ மலர் அணை தான் - இந்தப் பூப்படுக்கை, வெம்பாலையால் வகுத்ததுஓ - வெப்பமுள்ள பாலைநிலத்தா லியன்றதோ?' எனும் - என்பான்: தென்றல் தன்னைஉம் - தென்றற் காற்றையும், தீ எனும் - தீயென்று சொல்வான்: திங்களை - சந்திரனைப் பார்த்து, (இவன்), தினகரன் கொல் - சூரியனேயோ!' என்று - என்றுகருதி, ஏங்கும்-ஏக்கமடைவான்: செயல் அழிந்து - செய்யவேண்டிய தொழில் இன்னதென்றுணராது மனகிழ்ந்து, அன்று-அன்றைத்தினம், அவன்-, கருங் கங்குலில்-கரிய இராப்போதிலே, பட்ட - அடைந்த, பாடு - வருத்தத்தை, அவனை அல்லது - அவனை யல்லாமல், யார்-(வேறு)யாவர், படுவார்கள்ஏ- அனுபவிப்பார்களோ? (எ - று.) பாலை-மிகவும் வெம்மையையுடைய நிலமாதலால், தனக்கு மிக்கவெப்பஞ்செய்யும் மலரணையை, 'வெம்பாலையால் வகுத்ததோ இம்மலரணைதான்' என்னலானான். காமமயக்கம் கொள்பவர்க்கு, குளிர்ந்திருப்பனவான மலரணை திங்கள் தென்றல் முதலியன வெப்பத்தைச் செய்தல், இயற்கை. அல்லதை ஐ - சாரியை. 'அன்றகன் கருங்கங்குலில்' என்றும் பாடம். (64) |