உம்-(பஞ்சேந்திரியங்கட்கு உரிய சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்னும்) ஐந்துவிஷயங்களும், பரிவு கூர - துன்பத்தை மிகுவிக்க, பரிந்து-(அதனால்) மனம் வருந்தி,-உயர்ந்தோர் புகல்வாசக ஆதிகள் கற்றுஉம் தெளிந்திலை - பெரியோர் கூறியுள்ள நீதிவாக்கியங்களையெல்லாம் படித்திருந்தும் மனத்தெளிவு பெற்றாயில்லை: மதன(ன்) வேதத்தின் மார்க்கம்உம் பார்த்திலை - மன்மதவேதத்தின் முறைமையையும் காண்கின்றாயில்லை: நறுந் தார் முடி கீசகா - நறியமாலையையணிந்த முடியையுடைய கீசகனே! நாசகாலம் வரும் பொழுது- , ஆண்மைஉம் - மனவுறுதியும், ஞானம்உம் - நல்லறிவும், கெடும் ஓ - கெட்டு விடுமோ?' என்று - எனச்சொல்லி, அழுதனள் - புலம்பலானாள்; (எ - று.) பாசம்- பாஸம்: கயிறு என்ற பொருளுள்ள இவ்வடசொல், மனப்பிணிப்புஎன்ற பொருளை இலக்கணையாற் காட்டும். மதனவேதம் - வாத்ஸ்யாயனம்;அடியோடு தன்மீது விருப்பமில்லாதவரைப் புணரலாகா தென்பது,மதனவேதத்தின் மார்க்கமாம். (66) 15.-மூன்று கவிகள்-ஒருதொடர்:சுதேட்டிணை'நின்கற்புக் குலையா மல் கீசகனாவிகாக்க,இந்தமாலையைக் கொடுத்துமீள்வாய்'என்று ஆகுலத்தோடு வண்ணமகளைவேண்டினமையைத் தெரிவிக்கும். ஆகுலத்தொடுநெஞ்சந்தளர்ந்துதன்னருகினின்ற வருந்ததியேநிகர், மீகுலக்கொடிதன்னிருதாள்மிசை வீழ்ந்துநின்றன் விழியருளுண்டெனில், கோகுலத்தினுயர்ந்தவென்காதலன் கோலுநீதியுங்குன்றா வெனதுரை, நீகுலைக்கிலனைத்துமின்றேகெடு நேரிழாயிதுநெஞ்சுறக் கேட்டியால். |
(இ -ள்.) (பின்பு அந்தச்சுதேஷ்ணை),- ஆகுலத்தொடு - வருத்தத்தினால், நெஞ்சம் தளர்ந்து - மனம் சோர்ந்து, தன் அருகில் நின்ற-, அருந்ததி நிகர் - அருந்ததியை யொத்த, மீ குலம் கொடி தன்-சிறந்த குடியில்தோன்றிய கொடி போன்றவளான திரௌபதியின், இரு தாள்மிசை வீழ்ந்து - இரண்டு பாதங்களிலே வணங்கி,- (அவளைநோக்கிப் பின்வருமாறு கூறலானாள்): நேர் இழாய் - அழகிய ஆபரணங்களை யணிதற்குரியவளே! நின்தன் - உன்னுடைய, விழி அருள் உண்டு எனில்-கண்ணின் அருள்நோக்கம் உண்டு என்றால், (அப்போது), கோ குலத்தில் - அரசர்திரளில், உயர்ந்த - மேம்பட்ட, என் காதலன் - என் கணவனுடைய, கோல்உம் - செங்கோலும், நீதி உம்-அரசநீதியும், குன்றா-பழுதுபடா: எனதுஉரை - என் பேச்சை, நீ-, குலைக்கில்-(செய்யாது) தட்டினால், அனைத்துஉம் - (என் காதலனுடைய கோலும் நீதியுமாகிய) எல்லாமும், இன்றுஏ கெடும் - இன்றைத்தினமே அழியும்: இது - (யான்சொல்லிய) இந்தப்பேச்சை, நெஞ்சு உற-மனம் பொருந்த, கேட்டி - கேட்பாய்; (எ - று.) நீகீசகனிடத்துப் போய்வரவேணு மென்று நேரே சொல்லுதற்குக் கூசிப் பூர்வபீடிகையாக இங்ஙனம் சுதேஷ்ணை கூறுகின்றாள். |