(இ - ள்.) மாது அவள் - பெண்ணான அந்தத்திரௌபதி, கீசகன் மனையில் ஏக(உம்)-கீசகனுடைய மனையிலே செல்லவும், (அவ்வேளையில்), அல்போது அகலஉம் - இராப்போது கழியவும், அவன் - அந்தக்கீசகனுடைய, புலம்பல் - தனிமையினாலாகிய துன்பம், போகவும்-,-பாதம் இல் - காலில்லாதவனான [முடவனான], வல் திறல் - மிக்க சாமர்த்தியத்தையுடைய, பாகன் - பாகனாகிய அருணனென்பவனால், ஊர்ந்த - செலுத்தப்பெற்ற, தேர் - தேரின் மீது, ஆதபன் - சூரியன், உதயவெற்பு - உதய மலையிலே, அணுகினான் - அடைந்தான்; (எ - று.)-அரோ - ஈற்றசை. தான்காலில்லாதிருக்கையில் ஒற்றைச்சக்கரத்தையுடைய சூரியனது தேரைஒருநாளிற் பகலும் இரவும் உண்டாகும்படி வெகுவிரைவாகச் செலுத்துதலால், 'வன்றிறற் பாகனூர்ந்த தேர்' எனப்பட்டது. இதுமுதல் இருபத்தாறுகவிகள் - பெரும்பாலும் மூன்றாஞ்சீரொன்று மாச்சீரும், மற்றவை விளச்சீர்களுமாகிய அளவடிநான்கு கொண்ட கலிவிருத்தங்கள். (72) 21.-திரௌபதியைக் கண்டதும்கீசகன் தகாதமொழி சொல்ல, அவள் சூரியனை வணங்குதல். தருக்கியகாமுகன்றகாதுசொல்லவே உருக்கிளர்சாயலோடுளமழிந்துபோய் முருக்கிதழ்வல்லிதன்முளரிச்செங்கையால் அருக்கனையிறைஞ்சினாளழிவில்கற்பினாள். |
(இ -ள்.) தருக்கிய - வலிமைச்செருக்கைக்கொண்ட, காமுகன் - காமுகனாகிய கீசகன், தகா (த) து - தகாதவார்த்தைகளை, சொல்லவே-,-அழிவு இல் கற்பினாள் - அழிதலில்லாத கற்பையுடையவளாகிய, முருக்கு - பலாசமலர்போன்ற, இதழ் - உதட்டையுடைய, வல்லி - கொடிபோன்றவளான அந்தத் திரௌபதி,-உரு - (தனது) வடிவத்திலே, கிளர் - விளங்குகின்ற, சாயலோடு - நிறத்துடனே, உளம் - மனமும், அழிந்து - அழிய, போய்-,-தன் - தன்னுடைய, முளரி - தாமரைமலர்போன்ற, செங்கையால் - சிவந்த கையினால், அருக்கனை - சூரியனை, இறைஞ்சினாள் - வணங்கினாள்; (எ - று.)-சூரியனை வணங்கின படியை அடுத்த செய்யுள் தெரிவிக்கும். உலகத்தில் நடப்பதற்கெல்லாம் சாட்சியாகிய தேவதையாதலால், சூரியனையிறைஞ்சிக் கூறினான். (73) 22.-சூரியனைத் தன்னிடரைப்போக்குமாறு திரௌபதி வேண்டுதல். துரங்கமோரேழுடன்சோதிகூர்மணிக் கரங்களோராயிரங்கவினத்தோன்றினாய் |
|