பக்கம் எண் :

52பாரதம்விராட பருவம்

மிகுவித்தன என்று கூறவேண்டிய இடத்தில் 'காட்டும்' என்று
பிரயோகித்திருத்தலால், இலக்கணையால், அச்சொற்குச் சொரியப் பெற்ற என்று
பொருள் கூறலாயிற்று.                                     (77)

26-கீசகன் தன்முன்னேநிற்கும் திரௌபதியைக் காணுதல்.

தாக்கியகாமநோய் தழைக்கவன்புற
நோக்கியதிசையெலாங்காணுநோக்கினான்
பாக்கியநெஞ்சுறப்பலித்ததென்னவே
நீக்கியமடந்தைமுனிற்றல்கண்டுளான்.

     (இ - ள்.) தாக்கிய - (தன்னை) வருத்திய, காமம் நோய் - மன்மதனால்
நேர்ந்த வியாதியானது, தழைக்க - கிளையாநிற்க, அன்புஉற - காதல்
பொருந்த, நோக்கிய-கண்ணுக்குஎட்டிய, திசை எலாம் - திக்குக்கள்
முழுவதிலும், காணும் - பார்க்கின்ற, நோக்கினான் - கண்பார்வையை
யுடையவனான கீசகன்,- 'பாக்கியம் - (தான் செய்துள்ள) புண்ணியப்பேறு,
பலித்தது - பயனையுண்டாக்கிற்று', என்ன - என்று கருதுமாறு, நீக்கிய
மடந்தை - (தன்னை) முன்பு விலக்கிய பெண்ணாகிய திரௌபதி, முன் நிற்றல்
- முன்னே நிற்பதை, நெஞ்சுஉற - மனமார, கண்டுளான் - பார்த்தவனானான்;
(எ - று.)

     காமநோய் மிகமிக, கண்ணுக்குத் தெரியுமிடங்களி லெல்லாம் கீசகன்
மருளமருள விழித்துப் பார்த்தவனாய், திரௌபதிவந்து தன் முன் நிற்றலைக்
கண்டானென்க.  அவள் முன்னேநின்றது - தான்செய்த புண்ணியப்பயனே
அவளைத் தன்முன்னே வந்துநிற்குமாறுசெய்தது என்று அந்தக்கீசகன்
கருதுதற்கு இடங்கொடுத்தது என்ற கருத்துப்பட, 'பாக்கியம்பலித்த தென்ன
நெஞ்சுற மடந்தை முன் நிற்றல் கண்டுளான்' என்றார்.              (78)

27.-இரண்டுகவிகள் -தன்ஆதரந்தோற்றத் திரௌபதியை
வருகஎன்று கீசகன் அழைத்தலைத் தெரிவிக்கும்.

வந்தனளென்னுடை மாதவப்பயன் 
வந்தனளென்னுடைவழிபடுந்தெய்வம் 
வந்தனளென்னுடையாவிவாழ்வுற
வந்தனளென்னுடைவண்ணமங்கையே.

மூன்றுகவிகள் - ஒருதொடர்.

      (இ -ள்.) என்னுடை மாதவம் பயன் - என்னுடைய பெருந்தவத்தின்
பயன் போன்றவள், வந்தனள்-: என்னுடை வழிபடும் தெய்வம் -
யான்வழிபடுகின்ற தெய்வம் போன்றவள், வந்தனள்-: என்னுடை ஆவி - என்
னுடைய உயிர்போன்றவளான பெண், வந்தனள்-: என்னுடை வண்ணமங்கை -
என்னுடைய வண்ண மங்கை, வாழ்வு உற-(யான்) வாழ்ச்சியடைய,  வந்தனள்-;
(எ - று.)

     வழிபடுகிறதெய்வம் தன்விருப்பத்தை யளிக்கவல்லதாதல் போல இந்த
வண்ணமங்கை தன்விருப்பமாகிய கலவியின்பத்தை