பக்கம் எண் :

54பாரதம்விராட பருவம்

30.-கீசகனால்தொடரப்பெற்று ஓடின திரௌபதி
அரண்மனையில் அரசர்காண வந்து வீழ்தல்.

ஓடியமடக்கொடி யுலகுகாவலன்
சூடியமணிமுடிதுலங்குகோயிலின்
வாடியகொடியெனவந்துவீழ்ந்தனள்
நீடியவேத்தவைநிருபர்காணவே.

      (இ -ள்.) ஓடிய-(அங்ஙனம்) ஓடிப்போன, மடம் கொடி - மடப்பத்
தையுடைய கொடிபோன்றவளான திரௌபதி,-வாடிய கொடி என - வாட்டமுற்ற
கொடி போல,-வேந்து அவை நீடிய நிருபர் காண - அரச சபையிலே
மிக்குள்ள அரசரெல்லாங் காணாநிற்கையில், உலகு காவலன் -
விராடதேசத்திற்குத் தலைவனாகிய விராடராசன், சூடிய - அணிந்துள்ள, மணி
முடி - இரத்தினம் பதித்த கிரீடத்தோடு, துலங்கு - விளங்குகின்ற, கோயிலின் -
அரண்மனையிலே, வந்து வீழ்ந்தனள்-; (எ - று.)

     தன்முறையீட்டை யுணர்த்துமாறு காவலன்மணிமுடியுடன்
துலங்குகோயிலிற் சென்றன ளென்க.  இராசசபையிற் பலஅரசர்
திரண்டிருப்பாராதலால், 'நீடிய வேத்தவைநிருபர் காணவீழ்ந்தனள்' என்றார்.
இனி, நிருபர் என்றது-விராடனைக்காட்டுமென்றலும், தருமபுத்திரனைக்
காட்டுமென்றலும் உண்டு.  நீடிய - பெருமைபெற்ற, வேத்தவை யெனினுமாம்.
                                                          
(82)

31.-அங்குக் கீசகன்தன்னிணைக்கையால் திரௌபதியைத்
தீண்டக் கருதுதல்.

தொழுந்தகைமனுகுலத்தோன்றல்கண்ணெதிர்
விழுந்தழுந்தெரிவையைவேட்கைநோயினால்
அழுந்தியகாமுகனச்சமின்றியே
செழுந்துணைக்கைத்தலந்தீண்டவுன்னினான்.

     (இ - ள்.) தொழும் தகை - (யாவராலும்) வணங்குதற்கு உரிய நற்குண
முடைய, மனு குலம் தோன்றல் - மனுகுலத்திலே தோன்றியவனான,
விராடராசனுடைய, கண் எதிர் - கண்ணுக்கு எதிரிலே, விழுந்து-, அழும்-
அழுகின்ற, தெரிவையை-பெண்ணாகிய திரௌபதியை, வேட்கை நோயினால்-
காதல்நோயிலே, அழுந்திய - ஆழ்ந்து விட்ட, காமுகன் -
காமவிச்சையையுடையவனான கீசகன், அச்சம் இன்றி-(பலருங்காண்கையில்
நாம் ஒரு பெண்ணைத் தீண்டலாமோ? என்கிற) கூச்சமு மில்லாமல், செழுந்
துணை கைத்தலம் - வலிமையுள்ள இரட்டையான (தன்)கைகளால், தீண்ட -
(அவளைப்) பற்றுவதற்கு, உன்னினான் - நினைத்தான்; (எ - று.)

      மனு -வைவஸ்வதமனு.  இந்தக்கீசகன் மனுகுலத்தோன்றலின்
கண்ணெதிரில் அச்சமின்றித் தெரிவையைத் தீண்ட உன்னிய காரணம் -
வேட்கைநோயிலழுந்தியதும், அரசன் தன்னை யொன்றுஞ்