பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 57

தனித்துள்ள பெரிய மராமரமானது, தழல்கொளுந்திடாது - நெருப்புப்பற்றி
யெரிவதற்கு ஏற்றதாகாது: (ஆகையால் இப்போது), உனக்கு அடும் இந்தனம்
அன்று - உனது அடுதொழிற்கு ஏற்ற விறகு அன்று,' என்று-, ஓதினான் -
(குறிப்பினாற்) சொல்லி (அந்த வீமன் செயலை)த் தடுத்திட்டான்; (எ - று.)

     இந்தனத்துக்கு உதவுமாஎன்று பலாயனன்பார்ப்பதாக வைத்துக்கொண்டு,
'இது விறகுக்கு உதவா தாதலால், இதனைப் பிடுங்கவேண்டா' என்று
தடுப்பவன்போல 'இந்தவேளையில் இதுகொண்டு எதிரியை ஒழிக்க முயல்வது
தகாது' என்பதைக் குறிப்பித்தான் தருமபுத்திர னென்க.  பலாயனனென்ற
வீமனுடையசெயலை இங்குத் தருமபுத்திரன் வேறுகாரணங்கூறிமறைத்ததாக
வந்தது அணியியலில் -
வஞ்சநவிற்சியணியின்பாற்படும்:  வடநூலார்
வ்யாஜோக்தி யென்பர்.  முனித்தகை - முனிவர்க்குரிய நற்குணமுடையவனென
அன்மொழித்தொகை.                                         (87)

36.-அதுகேட்டு வீமன் வலிமையை யடக்கிக்கொண்டுநின்றானாக,
  திரௌபதி விராடன் முன்னிலையில் அழுதுகொண்டு கூறுதல்

சீரியகங்கனன் றுரைத்தசெம்மொழி
பாரியதாமெனப் பலாயனன்கொளா
வீரியமகத்துளே நிறுத்தும்வேலையில்
கூரியவிழியினா ளழுதுகூறுவாள்.

     (இ - ள்.) சீரிய - சிறப்புற்ற,கங்கன் - கங்கனென்று மாறுபெயர் பூண்ட
தருமபுத்திரன், அன்று - அப்போது, உரைத்த - சொன்ன,  செம் மொழி -
நேர்மையான வார்த்தையை, 'பாரியது ஆம்-(இச்சொல்) சிறப்புற்ற பேச்சாம்,'
என - என்று, பலாயனன் - வீமசேனன், கொளா - (மனத்திற்) கொண்டு,-
வீரியம் - (தன்) வலிமையை, (வெளிக்காட்டாது), அகத்துளே - (தன்)
மனத்தினிடத்தில்தானே, நிறுத்தும் - அடக்கிய, வேலையில் - அப்போது,-கூரிய
விழியினாள்-கூர்மையான கண்களை யுடையவளான திரௌபதி, அழுது
கூறுவாள் - அழுதுகொண்டு கூறுபவளானாள்; (எ - று.) - திரௌபதி
விராடன்முன்னிலையிலே புலம்பிக் கூறுவதை, மேல் மூன்று கவிகளிற் காண்க.
பாரியது - பருமையென்ற பண்படியாப்பிறந்த குறிப்புமுற்று.         (88)

37.-மூன்று கவிகள் - விராடனிடம் திரௌபதி
முறையிடுவதைத் தெரிவிக்கும்.

தீண்டுதறகாதெனச் செம்மையொன்றிலான்
வேண்டியசெய்வது வேத்துநீதியோ
ஆண்டகையிதற்குநீ யல்லவாமெனா
ஈண்டொருமொழிகொடா திருப்பதென்கொலோ.