பக்கம் எண் :

60பாரதம்விராட பருவம்

சிக்காமற்போவாரே யானால், (அப்போது மன்னவர்க்கு), நீதிஉம் -
நியாயமென்பதும், செல்வம்உம் - ஐசுவரியமும், நிலைபெறும் கொல் ஓ-
நிலைத்துநிற்குமோ? (முறைசெலுத்தும் மன்னவர் தாம் செலுத்த வேண்டிய
நீதிநெறியில்), 'ஏதிலர் - (இவர் நமக்கு) யாதோரியையும் இல்லாதவர்: தமர்-
(இவர் நமக்குச்) சுற்றத்தார்', என-என்று சொல்லப்படுகின்ற, இரண்டு-(அந்த)
இரண்டையும், பார்ப்பர்ஓ-கருதுவார்களோ? (எ - று.)

      அரசர்முறைசெலுத்தும்போது 'தமர்', பிறர்' என்று பார்த்தல்
தகாதாகையால், தமரிற் சேர்ந்த கீசகன் தீங்குஇழைத்தஇப்போது அவனையுந்
தண்டித்தலே தகுதி யென்றவாறு.  'தீத்தொழில்' என வரற்பாலது,
செய்யுளோசையின்பம் நோக்கி 'தீதொழில்' என இயல்பாயிற்று.  பெறுங்கொல்
ஓ என்ற விடத்து, கொல்-அசை; கொல் - வினாவெனில், ஓ அசை.     (93)

42.யாருமில்லொருத்திநினில்லில்வைகினால்
ஆர்வமுற்றவள்வயினன்புகூர்வது
வீரமோதருமமோவிருப்பமோவிவை
பூரியரலாதவர்புரிதல்போதுமோ.

      (இ -ள்.) யார்உம் இல் - வேறொருகதியும் அற்றவளான, ஒருத்தி -
ஒருபெண்பிள்ளை, நின் - உன்னுடைய, இல்லில் - மனையிலே, (உன்னையே
கதியாகநம்பி), வைகினால் - தங்கினாளானால், (ஒருத்தன்), அவள் வயின்-
அவளிடத்து, ஆர்வம் உற்று - ஆசைகொண்டு, அன்பு கூர்வது -
காதல்மிகுவது,-வீரம்ஓ-வீரச்செயலோ? (அன்றி), தருமம் ஓ -  நியாயத்துக்கு
ஏற்றசெயலோ? விருப்பம்ஓ - காதற்செயலோ? இவை - இவ்வாறான
செயல்களை, பூரியர் அலாதவர் - கீழ்மக்களல்லாதார், புரிதல் - செய்வது,
போதும்ஓ - தகுமோ? (எ - று.)

     அகதியான ஒருத்திக்கு ஒருதீங்கும் வராதுபார்ப்பது வீரச்செயலும்
தருமச்செயலும் ஆகுமன்றி, அவளைப் பலாத்காரஞ் செய்வது
காதற்செயலுக்கும் தகாது: இங்ஙன் காதலிப்பதுபோன்ற செயல் அற்பர்செய்யுஞ்
செய்கையே யாமென்றவாறு.                                     (94)

43.கீசகனாயினுங்கேடுசெய்தனன்
ஆசைநோய்மன்பதையனைத்தினுக்குமுண்டு
ஏசிதுநினக்குமென்றிருந்தவேந்தொடும்
வாசகம்பலசொனான்மறைவலானுமே.

      (இ -ள்.) கீசகன் ஆயின்உம் - கீசகனாயிருந்தாலும், கேடு செய்தனன் -
செய்யத்தகாத காரியத்தைச் செய்தான்: (இதற்குக் காரணம்), ஆசை நோய் -
காதல்நோயென்பது, மன்பதை அனைத்தினுக்கு உம் -
மனிதவர்க்கத்திற்கெல்லாம், உண்டு - உள்ளதொன்றே (என்பது): (ஆனால்,
மன்னவனானவன் தீங்குசெய்தாரை ஒறுக்கவேண்டியவன்:  அவ்வாறு
தீங்குசெய்த கீசகனை நீ ஒறுக்காது வாளா இருக்கின்ற), இது - இச்செயல்,
நினக்கு உம் ஏசு - (மன்னவனான) உனக்