பக்கம் எண் :

62பாரதம்விராட பருவம்

(தன்)கண்களிலிருந்து கோபாக்கினியின்பொறி பறக்கவும், (அவ்வாறே), இரு
கை நெருப்பு எழ - (மோதிப் பகையழிக்கவல்ல) இரண்டுகைகளினின்றும்
நெருப்புத்தோன்றவும், உள் நெருப்பு எழ - மனத்திலும் உக்கிரந் தோன்றவும்,
தனது உடல் நெருப்பு எழ - (உள்ளிருக்கும் சினத்தீ வெளியேமூள்வதனால்)
தன் உடம்பினின்றும் நெருப்புத் தோன்றவும், மண் நெருப்பு எழ எழ -
(அந்தச் சினத்தோடு உக்கிரங்கொண்டு நடத்தலால்) நடக்கும்
பூமியினின்றுங்கூட நெருப்பு மிகுதியாகத் தோன்றவும், மடையில் - சமையல்
செய்யுமிடத்தில், எய்தினான் - போய்ச்சேர்ந்தான்; (எ - று.)

     ஒருபொருளையுடைய 'நெருப்பெழ' என்ற தொடர் பன்முறை வந்தது -
சொற்பொருட்பின்வருநிலையணி.  கைந்நெருப்பெழ என்றது - அப்போது
பகையைமோதி யொறுப்பதற்குக் கை ஒருபால் விரைவு கொண்டிருந்தமையைக்
குறிப்பிக்கும்.  நெருப்பெழவருமடையில் என்றும் பாடம்.         (97)

வேறு.

46.-சூரியாஸ்தமன வருணனை.
   
பன்னிரு வரினு நாடொறுங் கனக பருப்பதம் வலம்வருந் தேரோன்,
மின்னிகர் மருங்குல் விரதசா ரிணிபால் விளைவுறு  துயரம
                                            துணர்ந்து,
தன்னொரு மரபிற் றோன்றலை வெறுத்துத்  தனிப்பெருந்தேர்குட
                                          பொருப்பின்,
சென்னியி னுருள வுருட்டியத் திசையுஞ்சிவப்புறத் தானுமெய்
                                           சிவந்தான்.

    (இ - ள்.) பன்னிருவரின்உம் - (ஆதித்தர்) பன்னிருவருள்ளே, நாள்
தொறுஉம் - தினந்தோறும், கனகம் பருப்பதம் - பொன்மலையாகிய
மேருமலையை, வலம் வரும் - பிரதட்சிணமாக வருகின்ற, தேரோன் -
தேரையுடைய சூரியன்,- மின் நிகர் மருங்குல் விரதசாரிணிபால்-
மின்னலையொத்து விளக்கத்துடன் துவண்டு தோன்றுகின்ற இடையையுடைய
விரதசாரிணி யென்று மாறுபேர்பூண்ட திரௌபதியினிடத்தில், விளைவுறு -
தோன்றிய, துயரம் அது - மனவருத்தத்தை, உணர்ந்து -,- தன் ஒரு மரபில்
தோன்றலை - தனது ஒப்பற்ற வமிசத்திற்பிறந்த ஆண்களிற்சிறந்தோனாகிய
விராடமன்னவனை, வெறுத்து-, தனி பெரு தேர் -(தனது) தனித்த பெரிய
தேரை, குடபொருப்பின் சென்னியின் உருள உருட்டி - மேற்குமலையின்
[அஸ்தமயபருவதத்தின்] சிகரத்திலே உருண்டு செல்லுமாறு செலுத்திவிட்டு, அ
திசைஉம் சிவப்பு உற - அந்தமேற்குத்திக்குஞ் செந்நிறமடைய, தான்உம்
மெய்சிவந்தான்-.

     ஆதித்தியர் [சூரியர்] பன்னிருவராவார் - தாதா சக்கரன் அர்யமன்
மித்திரன் வருணன் அம்சுமான் ஹிரண்யன் பகவான் விவஸ்வான் பூஷா
ஸவிதா துவட்டா என்பவர்; இன்னும் சிறிது வேறாகவும் கூறப்படுவர்,
இந்தப்பன்னிரு பெயரைக்கொண்ட சூரியன் ஒவ்வொருமாதத்தில் ஒவ்வொரு
பெயர்பூண்டு மேருவை