பக்கம் எண் :

72பாரதம்விராட பருவம்

என்றனளென்பர்.  'மாமரத்தைக் கொக்கு என்பது துளு என்றனர்,
நச்சினார்க்கினியர்.  விடுத்தலின் - தங்குதலால் என்பாருமுளர்.    (111)

60.-குறியிடமாகியபொழிலிலுள்ள மண்டபத்தில் வருமாறுகூற,
கீசகனும் ஒருப்படுதல்.

குருட்டியன்மதியினானைக்கோதிலாவறிவின்மிக்காள்
மருட்டினளாகியந்தவளர்தடம்பொழிலினோர்சார்
இருட்டிடைநிலவுகாட்டுமின்பமண்டபத்தில்வம்மின்
உருட்டடந்தேரோயென்றாளவனுமஃதொருப்பட்டானே,

      (இ -ள்.) கோது இலா அறிவில் மிக்காள் - குற்றமற்ற அறிவினால்
மேம்பட்டவளான திரௌபதி,-குருடு இயல் மதியினானை - குருட்டுத்தன்மை
பொருந்திய புத்தியையுடையவனான அந்தக்கீசகனை, மருட்டினள் ஆகி -
மதிமயங்கச்செய்தவளாய்,-'அந்த வளர் தடம் பொழிலின் ஓர் சார்-(நான்
குறித்த) அந்தவளர்ந்த பெருஞ்சோலையின் ஒருபுறத்திலுள்ள, இருட்டிடை
நிலவு காட்டும் - மிக்க இருட்டிலும் நிலாவெளிச்சம்போன்று பளிச்சென்று
தோன்றுவதாகிய, இன்பம் மண்டபத்தில் - இனிதான மண்டபத்தில், உருள் தட
தேரோய் - (இனிதுஉருண்டு செல்லுகின்ற) உருளைகளையுடைய
பெருந்தேரையுடையவனே! வம்மின்-வாருங்கள்,' என்றாள் - என்று (கூடுதற்கு
உரிய இடத்தைக்) கூறினாள்; அவன்உம்-அந்தக் கீசகனும், அஃது-அந்த
வண்ணமகளின் பேச்சுக்கு, ஒருப்பட்டான் - சம்மதித்தான்;

      'முன்புதன்னை வேண்டாமையை அத்துணைகாட்டியவள் இப்போது
இசைந்து, இருட்பொழுதில் தனித்துவருதி என்கிறாளே? இவள் நம்மைக்கொல்ல
விரகு தேடியிருந்தால் என்செய்வது?' என்று கருதி அதற்காக ஆராய்ச்சியும்
செய்யவேண்டியிருக்க அஃது சிறிதுமின்றி, கீசகன் இசைந்ததனால், அவனை
'குருட்டியன் மதியினான்' என்கின்றார், தேரோய் வம்மின் - ஒருமைப்
பன்மைமயக்கம்.  உருள் என்பது தடந்தேரோய் என்ற விளியோடு இயைந்து,
அமங்கலப்பொருளைக் காட்டுவதாதலையும் அறிக.  வம்மோஎன்ற பாடத்துக்கு,
வம்-வாரும் என்பதன் மரூஉ: ஓ-அசை: மோ-அசையுமாம்.            (112)

61.-திரௌபதி அச்செய்தியைவீமனிடத்துக்சொல்லிவிட்டு
அப்பகலைப் போக்கியமை.

குறியவன்றனக்குநேர்ந்தகொடியவெங்கொலைவேற்கண்ணாள்
தறிபொருகளிற்றினன்னசமீரணன்மகனையெய்திச்
செறிவொடக்காளையோடுசெப்பியயாவுஞ்செப்பிப்
பிறிதொருகருத்துமின்றிப்பெரும்பகல்போக்கினாளே.

      (இ -ள்.) அவன் தனக்கு குறி நேர்ந்த - அந்தக்கீசகனுக்குக்
கூடுமிடத்தை உடன்பட்டுக்கூறிய, கொடிய வெம் கொலை வேல் கண்ணாள்-
மிகக்கொடிய கொலைசெய்யவல்ல வேற்படை போன்ற கண்களையுடையவளான
அந்தத்திரௌபதி, தறி பொரு களிற்றின் - கட்டுத்