பக்கம் எண் :

8பாரதம்விராட பருவம்

கோமளவல்லிக்கொடிநிகர்காளிகோயிலின்முன்னரோர்வன்னி
நாமளவிடுதற்கரியபல்கிளையானலம்பெறுபாதவநண்ணா.

      (இ -ள்.) யாமளம் மறையால் - யாமளமென்று சொல்லப்படுகிற வேத
மந்திரப்பகுதியைக் கொண்டு, யாவர்உம் பணிவாள் - எல்லாராலும்
வணங்கப்படுபவளும், எழு வகை தாயரில் ஒருத்தி - ஸப்தமாதாக்களில்
ஒருத்தியும், சாமளம் வடிவோடு அ நகர் வாழ்வாள் - கருநிற வடிவத்தோடு
அந்நகரில் வசிப்பவளும், சங்கு தண்டு அம்கையில் தரிப்பாள் - சங்கத்தையும்
தண்டாயுதத்தையும் அழகிய கையில் தரிப்பவளுமான, கோமளம் வல்லி கொடி
நிகர் காளி - அழகிய வல்லி யென்று பேர்பூண்ட கொடியை
யொத்திருப்பவளான காளியென்பவளின், கோயிலின் - கோயிலுக்கு, முன்னர் -
முன்புறத்திலே, நாம் அளவிடுதற்கு அரிய பல் கிளையால் - நம்மால்
அளவிடமுடியாத [மிக்க] பலகிளையோடு (பொருந்தி), நலம் பெறு - அழகு
பொருந்திய, ஓர் வன்னி பாதவம் - ஒரு வன்னிமரமானது, (இருப்பதை),
நண்ணா-கிட்டி,-(எ - று.)- "ஒளித்து ஒரு விரகால் வைத்தனராகி" என அடுத்த
கவியோடு தொடரும்.

      யாமளம்என்பது - அதர்வணவேதத்தின் ஒருபகுதியென்றும், அது-
காளிஸ்தோத்ரம் முதலியவற்றைக் கொண்ட தென்றுங் கூறுவர்.
எழுவகைத்தாயர் - ப்ராஹ்மீ மாஹேஸ்வரீ கௌமாரீ வைஷ்ணவீ மாஹேந்த்ரீ
வாராகீ மஹாகாளீ எனப்படுவர்.  சாமளம் = ஸ்யாமளம்: வடசொல்.  வன்னி =
வஹ்னி.  பாதவம் = பாதபம்:  அடியாற் பருகுவதெனக் காரணப்பொருள்படும்
வடசொல். வாழ்வாள் பலபடைதனது கைத்தரிப்பாள் என்றும்பாடம்.     (9)

10.தத்தமபடையுங்கவசமுமனைத்துந்தனித்தனியைவருந்தரித்த
மெய்த்திறலுடையயாவுமத்தருவின்கோடரத்தொளித்தொருவிரகால்
வைத்தனராகியாவருமுணராவகையருமறைகளும்பயிற்றி
முத்தலைவடிவேற்காளியைவணங்கிமுன்னினார்புரிதொழின்முற்றும்.

     (இ -ள்.) தனித்தனி - தனித்தனியே, ஐவர்உம் - பஞ்ச பாண்டவர்களும்,
தரித்த - பூண்டிருந்த, தம் தம படைஉம் - தங்கள் தங்களுடைய
ஆயுதங்களையும், கவசம்உம் - கவசங்களையும், அனைத்துஉம் - ஆடை
முதலியவற்றையும், மெய் திறல் உடைய யாஉம் - உண்மையான
வலிமையையுடைய மற்றுமுள்ளவற்றையும், அ தருவின் கோடரத்து - அந்த
வன்னிமரத்தின் பொந்திலே, ஒரு விரகால் - ஒப்பற்ற உபாயத்தினால், ஒளித்து
வைத்தனர் ஆகி - ஒளித்து வைத்தவராய்,- யாவர்உம் உணராவகை - எவரும்
அறியாதபடி, அருமறைகள் உம் பயிற்றி - அருமையான மந்திரங்களையுஞ்
சொல்லி, வடி முத்தலைவேல் காளியை வணங்கி - கூரிய திரிசூலத்தையேந்திய
காளிகாதேவியை வணங்கிவிட்டு, புரி தொழில் முற்றுஉம் முன்னினார் - (தாம்)
செய்யவேண்டிய தொழில் முழுவதையும் ஆலோசித்தார்கள்; (எ - று.)