பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 81

      காளைதன்னையும், உம்மை-உயர்வுசிறப்பு.  இனி, காளை-வீமன்,
தன்னையும் சூறையிற் சூழ்வருமாறு சுற்றி மிடலில் விஞ்சினானாகிய கீசகன்
பார்மிசை வீழ்வரப் புடைத்தனன் என்றலுமாம்.                    (129)

78.விழுந்தவன்மீளவும்வெய்துயிர்த்தனன்
எழுந்துதன்பகைவனதிருண்டகுஞ்சியை
அழுந்தவல்விரல்களாற்சுற்றியாய்மரக்
கழுந்தெனப்புடைத்தனன்கைகள்சேப்பவே.

      (இ -ள்.) விழுந்தவன் - விழுந்த வீமன், வெய்து உயிர்த்தனன்-
வெம்மையாகப் பெருமூச்சு விட்டவனாய், மீளவும் எழுந்து-, தன் பகைவனது -
தன் பகைவனான கீசகனுடைய, இருண்ட குஞ்சியை-கருநிறமுள்ள
தலைமயிரைஅழுந்த - உறுதியாக, வல் விரல்களால் சுற்றி-, ஆய்மரம் கழுந்து
என - ஆராயப்பெற்ற மரத்தின் கழுந்தைப் புடைப்பதுபோல, கைகள்சேப்ப -
அவன் தலைமயிரைப் பிடித்ததன்) கைகள் செந்நிறத்தையடையா நிற்க,
புடைத்தனன்-;

      கழுந்து- மரக்கட்டை.                                   (130)

79.புடைத்தனனிவனவன்புடைத்தகைகளை
விடைத்தனனகற்றிமெய்ம்மேவுபூதியும்
துடைத்ததனனாகியத்தோன்றல்வாயினை
உடைத்தனனொருகையாலொருகைபற்றியே,

      (இ -ள்.) புடைத்தனன் இவன் - புடைக்கப் பட்டவனாகிய இவன்,
புடைத்த அவன் கைகளை - புடைத்த அந்தவீமன் கைகளை, விடைத்தனன்-
கோபித்தவனாய், அகற்றி-நீக்கி, மெய் மேவு பூதிஉம் துடைத்தனன் ஆகி -
(பார்மிசைப் புடைத்ததனால் தனது) உடம்பிற்பட்ட புழுதியையும்
துடைத்தவனாகி, ஒரு கை பற்றி-(ஒருகையால் அவனைப்) பிடித்துக்கொண்டு,
ஒரு கையால் - மற்றொருகையினால், அ தோன்றல் வாயினை - அந்தவீரனது
வாயை, உடைத்தனன்-.

      இது,கீசகன்செயலைக் கூறியது.  விடைத்தனன் என்பதற்கு - விரைந்தவனாய் என்றும், விடுத்தவனாய்என்றும் தடுத்து என்றும் கூறுவாரு முளர்.                                                   (131)

80.-இருவரும் ஒத்துப்பொரஇரவில் வெகுநேரங் கழிதல்.

வீரமும்வலிமையும்விரகுமொத்தவர்
தீரமுந்தெளிவுநாஞ்செப்பற்பாலவோ
நேரமுஞ்சென்றது நிசையெனாமிகு
சூரமுஞ்செற்றமுமுடையதோன்றலே.

      (இ -ள்.) வீரம் உம் - வீரத்திலும், வலிமைஉம்-தேகவலிமையிலும்,
விரகு உம் - (போர்செய்யுந்) திறத்திலும், ஒத்தவர்-ஒத்தவர்களான அந்தக்
கீசகவீமர்களின், தீரம்உம்-மனோதைரியமும், தெளிவு