பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 87

92.-அங்ஙன் கருதிய உபகீசகர்சோலையைநோக்கிச்
சினத்தோடு ஓடுதல்.

அழிந்தகீசகனன்றிமற்றுண்டென
மொழிந்ததம்பியர்நூற்றொருமூவரும்
கழிந்ததீயுமிழ்கண்ணினராயுயிர்
ஒழிந்துபோதுமென்றுன்னினரோடினார்.

      (இ -ள்.) அழிந்த - உயிரொழிந்த, கீசகன் அன்றி - கீசகனல்லாமல்,
மற்று - பின்னும், உண்டு என மொழிந்த - உள்ளாரென்று கூறப்பட்ட, தம்பியர்
நூற்றொருமூவர்உம் - (அந்தக்கீசகனுடைய) தம்பிமாரான நூற்றொரு
மூன்றுபேர்களும்,-கழிந்த - மிக்க, தீ - நெருப்பை, (பெருஞ்சினத்தால்), உமிழ்
- வெளிச்சொரிகிற, கண்ணினர் ஆய் - கண்களையுடையவராய், உயிர்
ஒழிந்துபோதும் என்று - நம்முயிர் ஒழியப்பெற்றாலும் போகிறோமென்று,
உன்னினர் - எண்ணினவராய், ஓடினார்-(அந்தச்சோலையைக் குறித்து)
ஓடிச்சென்றார்.

     'கந்தருவரோடு செருவிளைந்து அதனால் நம்மண்ணனுக்கு ஒருகால்
மரணம் நேரிட்டிருப்பின் நாம் சென்றாலும் நமக்கும் அந்நிலை நேரக்கூடும்:
ஆயினும் ஒருகை பார்த்தேதீரவேண்டும்' என்று கருத்துடனே அந்த உபகீசகர்
சோலையைநோக்கி விரைந்துசென்றன ரென்பதாம்.  முதனூலுக்குஏற்ப 'நூற்றொ
டொரைவரும்' என்று பாடமிருப்பின் நலம்.                        (144)

93.-பன்னூறு தீபங்களோடுஅந்தச்சோலையிலே சென்று
உபகீசகர் தேடிப்பார்த்தல்.

நகரியெங்கும்வெருவரநள்ளிருள்
நுகருமாறுபன்னூறொளித்தீபமோடு
அகருநாறுதண் காவிலரும்பகல்
நிகருமென்னநெருங்கினர்நேடினார்.

      (இ -ள்.) நகரி எங்குஉம்-(அந்தஉபகீசகர் செய்த ஆர்ப்பாடத்தினால்)
அந்தவிராடநகரில் எவ்விடத்திலுள்ளாரும், வெருவர - அச்சமடையாநிற்க,-
அரும் பகல் நிகரும் என்ன - (அவ்விரவு) அருமையான பகற்பொழுதை
யொத்திருக்கு மென்று கருதும்படி, நள் இருள் நுகரும் ஆறு - செறிந்த
இருளைப் போக்குமாறு, பல் நூறு ஒளிதீபமோடு-பல நூற்றுக்கணக்கான
ஒளியைக்கொண்ட தீபத்தோடு, அகரு நாறு தண் காவில் - அகருவின் மணம்
வீசுகின்ற குளிர்ந்த அச்சோலையில்,(அந்தஉபகீசகர்கள்),நெருங்கினர்- நெருங்
கிப்போய், நேடினார்- (நிகழ்ந்ததை யுணருமாறு) தேடிப்பார்த்தார்கள்; (எ- று.)

94.-உபகீசகர்மண்டபத்திடையிலே வீமனாற் சிதைவுண்ட
கீசகன்வடிவைக் காணுதல்.

சுதைநிலாவொளிசூழ்மண்டபத்திடைச்
சிதைவுமெய்யொடுஞ்செம்பொற்சிலம்பெனக்