பக்கம் எண் :

கீசகன் வதைச் சருக்கம் 89

அடுதும் -எரித்திடுவோம்,' என்றார்கள் - என்று (அந்த உபகீசகர்)
தீர்மானித்திட்டார்கள்; (எ - று.)

     எண்ணிலாமனத் தெண்ணுடை-தொடைமுரண்,  வண்ணமகளையும்
ஈமவெரியாலடுமாறு உபகீசகர் வெகுளியால் தீர்மானித்தனரென்க.  எண் நிலா
மனத்து என்று பிரித்து - வலி நிலாவுகின்ற மனத்தையுடைய என்று பொருள்
கூறுவாருமுளர்: இப்பொருளில் எண்-ஏண்என்பதன் விகாரம்.  விண்ணுளா
ரென்றது, கந்தருவரை.

97.-இரண்டு கவிகள்-ஒரு தொடர்:வண்ணமகளை ஈமவெரியிலிடு
  மாறு உபகீசகர் வந்துபற்றுதலும் அவள் தன்மெய்காக்குங்
கடவுளரைக்குறித்து அரற்றுதல்.

சொல்லுமாடவர்சொல்லினராயினும்
கொல்லுமோகனறான்பெற்றகோதையை
மல்லன்மாலையினார்வந்துபற்றலும்
அல்லல்கூர வரற்றினளாலவள்.

     (இ-ள்.) சொல்லும்-(இவ்வாறு வண்ணமகளை ஈமவெரியிலிட்டெரிக்குமாறு
தீர்மானித்துச்) சொல்லிய, ஆடவர்-, சொல்லினர் ஆயினும்-, கனல் - அக்கினி,
தான் பெற்ற கோதையை - தான் பெற்ற பெண்ணை, கொல்லும்ஓ-உயிர்நீங்கச்
சுட்டெரிக்குமோ? [எரிக்காதன்றோ?] (இதுநிற்க): மல்லல் மாலையினார் -
வளப்பமுள்ள மலர்மாலையை யணிந்தவரான உபகீசகர்கள், வந்து-, பற்றலும் -
(அந்தவண்ணமகளைப்) பிடித்துக்கொள்ளுதலும், அவள்-, அல்லல்கூர-
துன்பம்மிக, அரற்றினள் - கதறலானாள்; (எ - று.)

     அந்தவண்ணமகள் அரற்றினவகை மேற்கவியிற் பெறப்படும்.
முதலிரண்டடிகள்-உபகீசகரெண்ணம் பலிக்கா தென்பதைப் பற்றிய கவிக்கூற்று:
ஒருகால் உபகீசகர்கள் அந்தத்திரௌபதியை ஈமவெரியிலிட்டாலும்,
எரியினின்று பிறந்தவளான அவளை அந்தஎரி எரிக்காதென்றவாறு.  கோதை -
மயிர்முடி: உடையாளுக்கு ஆகுபெயர்: இனி, கோதை - மாலை: அதுபோல்
மெல்லியலாளுக்கு உவமவாகு பெயருமாம்.                        (149)

98.வெருவருங்கருங் கங்குலில்வெங்கொலை
நிருபரென்னைநெருப்பிடைவீழ்த்துவான்
கருதினார்கண்மெய்காக்குங்கடவுள்காள்
வருதிரென்றுகண்வார்புனல்சோரவே.

      (இ -ள்.) 'வெருவரும் - அஞ்சத்தக்க, கருங் கங்குலில்-கரிய இரவிலே,
வெங் கொலை நிருபர் - கொடிய கொலைப்பாதகத்தைச் செய்யக்கருதிய சில
மன்னவர், என்னை-, நெருப்பிடை-, வீழ்த்துவான் - தள்ளும்பொருட்டு,
கருதினார்கள் - எண்ணியுள்ளார்கள்: மெய்காக்கும் கடவுள்காள் -
என்னுடலைப் பாதுகாக்கின்ற தெய்வங்களே! வருதிர் - (என்னைப் பாதுகாக்க)
வாருங்கள்,' என்று - என்றுசொல்